சர்க்கரை நோயாளிகள் அசைவ உணவுகளை சாப்பிடலாமா?


இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான நபர்களை வாட்டி வதைக்கும் நோய்களில் முக்கியமானதாக திகழ்கிறது சர்க்கரை நோய்.

30 வயதை கடந்துவிட்டாலே சர்க்கரை நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.

அதிலும் சர்க்கரை நோய் வந்துவிட்டால் எதை சாப்பிடுவது? இதை சாப்பிட்டால் என்ன நடக்கும்? என பல கேள்விகளும் எழத்தொடங்கிவிடும்.

அதிலும் குறிப்பாக அரிசி உணவுகளை சாப்பிடலாமா? அசைவ உணவுகளை சாப்பிடலாமா? பழங்களை எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு பதிலாகிறது இந்த பதிவு.

பாதாம் பால் யாரெல்லாம் குடிக்கக்கூடாது? ஏற்படும் ஆபத்துக்கள் என்ன? 

அரிசி உணவுகள்

அரிசி உணவைச் சாப்பிடுவதால் சர்க்கரை அதிகரித்துவிடும் என பலரும் சொல்லக்கேட்டிருப்போம்.

ஆனால் உடலின் ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கப் பாரம்பர்ய உணவுமுறைகளே பெரிதும் உதவும் என்பதே உண்மை.

நம் பாரம்பரிய நெல் ரகங்களை கண்டறிந்து அவற்றை சமைத்து உண்பதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

இதுதவிர சிறு தானியங்களான கேழ்வரகு, தினை, சாமை, கம்பு போன்றவற்றையும் சமைத்து உண்பதால் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

அசைவ உணவுகள்

சர்க்கரை நோயாளிகள் இறைச்சி வகைகளைத் தவிர்த்து மீன் உணவுகளைச் சாப்பிடலாம், எண்ணெய்யில் பொரித்த மீன்களைத் தவிர்ப்பது நல்லது.

எனினும், மீன் மற்றும் இறைச்சிகளை உண்ணும்போது அரிசியுடன் சேர்த்து உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

வாரம் ஒருமுறை நன்றாக வேகவைத்த இறைச்சியை தாராளமாக சாப்பிடலாம்.

பழங்கள்

உடலின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத பழங்களை சாப்பிடலாம், ஆனால் பழச்சாறு அருந்தக்கூடாது.

பப்பாளி, ஆப்பிள், மாதுளை, கொய்யா, நாவல் போன்ற பழங்களை சிறுசிறு துண்டுகளாக்கி கடித்து சாப்பிடவும்.

எனினும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சாப்பிடவும், உணவுடன் சேர்ந்தும் சாப்பிட வேண்டாம்.

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.