பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு வாரத்தில் திடீரென வட்டி விகிதத்தினை உயர்த்தியது. இது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வட்டி விகித அதிகரிப்பு வியப்பினை அளிக்கிறது.
நாணயக் கொள்கை கூட்டம் வரும் முன்பே அதிகரித்திருப்பது வியப்பினை கொடுத்துள்ளது.
கடந்த மே 4 அன்று ஒரு ஆச்சரியதக்க நடவடிக்கையினை மத்திய வங்கியானது திடீரென எடுத்தது. இது ரிசர்வ் வப்கி ரெப்போ விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.40 சதவீதமாக அதிகரித்தது.
பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்வு.. நிர்மலா சீதாராமன் சொன்ன காரணம் இதுதான்..!
வட்டி அதிகரிப்பு
வட்டி விகிதம் எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், திட்டமிடப்படாத இந்த கொள்கை குழுவின் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 2018-க்கு பிறகு முதல் முறையாக தற்போது தான் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பினால் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்?
மத்திய வங்கியானது பணவீக்கத்தினை சுட்டிக் காட்டிய நிலையில், நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது மேற்கோண்டு அதிகரித்துள்ளது. இதற்கிடையில் மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதத்தினை அதிகரித்தது.
இன்னும் அதிகரிக்கலாம்
ஏற்கனவே வட்டி விகிதமானது அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையானது இன்று வரையில் சுமூக நிலையை எட்டாத நிலையில், அது மேற்கோண்டு எண்ணெய் விலையினை ஊக்குவிக்கலாம். இது பணவீக்கத்தினை மேற்கோண்டு ஊக்குவிக்கலாம். இது மேலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.
என்ன செய்யலாம்
முன்னதாக ஒரு அறிக்கையில் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையினை எடுத்திருந்தாலும், உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் மீதான விலையேற்றம் பணவீக்கத்தின் முக்கிய காரணிகளாக உள்ளன. ஆக அதன் விலையினை குறைக்க அரசு நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
FM nirmala sitharaman says RBI repo rate hike came as a surprise
FM nirmala sitharaman says RBI repo rate hike came as a surprise/வட்டி அதிகரிப்பு வியப்பை அளிக்கிறது.. நிர்மலா சீதாராமன் கூறுவதென்ன?