திருமண விழாவிற்கு பாடுவதற்காக வரச்சொல்லி துப்பாக்கி முனையில் பாடகி கூட்டுப் பலாத்காரம்: 3 பேர் கும்பல் அதிரடி கைது; பீகாரில் அட்டூழியம்

பாட்னா: திருமண விழாவிற்கு பாடுவதற்காக வரச்சொல்லி, பாடகி ஒருவரை துப்பாக்கி முனையில் மூன்று பேர் கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம், பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பாடகியான 28 வயது இளம்பெண், திருமணம், பிறந்தநாள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடல்களை பாடி வருவார். பல ஊர்களுக்கும் சென்று பாடல்களை பாடி வருவார். இந்நிலையில் பிந்து குமார், சஞ்சீவ் குமார், காரு குமார் என்ற மூன்று இளைஞர்கள், அந்த பாடகிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு,  திருமண நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்தனர். அவர்கள் பேசிய நாளில், அந்த பாடகியும் பாட்னா அடுத்த ராம் கிருஷ்ணா நகருக்கு வந்தார். அவரை மூன்று இளைஞர்களும் வரவேற்றனார். ஆனால், அவர்கள் கூறியபடி அங்கு எந்த திருமண நிகழ்ச்சியும் நடக்கவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்ட ேபாது, அவர்கள் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று மூவரும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களின் பிடியில் தப்பிய அவர், மற்றொரு அறைக்குள் புகுந்து கதவை உள்தாழிட்டு பூட்டிக் கொண்டார். பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தன்னை மீட்க வேண்டுகோள் விடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அறைக்குள் இருந்த பாடகியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட பாடகி ராம் கிருஷ்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘திருமண விழாவிற்கு பாடுவதற்காக 3 இளைஞர்கள் என்னை செல்போனில் அழைத்தனர். அவர்கள் கூறியபடி குறிப்பிட்ட திருமண மண்டபத்திற்குச் சென்றேன். ஆனால் ​​அங்கு திருமண நிகழ்ச்சி ஏதும் நடைபெறாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் மூவரும் துப்பாக்கியைக் காட்டி என்னை அறைக்குள் இழுத்துச் சென்றனர்.ஒவ்வொருவராக என்னை பலாத்காரம் செய்தார்கள். மேலும் அவர்கள் அந்த பலாத்கார சம்பவத்தை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிடியில் இருந்து எப்படியோ தப்பித்து, வேறு அறைக்குள் ஓடிச் சென்று, அந்த அறையை உள்தாழிட்டு பூட்டிக் கொண்டேன். அதன்பின், காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து அவர்களுக்குத் தெரிவித்தேன்’ என்றார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி ரஞ்சன் கூறுகையில், ‘கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று அந்த பாடகியை பத்திரமாக மீட்டோம். அவரிடம் ெபறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் பிந்து குமார், சஞ்சீவ் குமார், காரு குமார் ஆகிய மூவரையும் கைது செய்தோம். அவர்களுக்கு எதிராக ஐபிசியின் 376 டி, 34, ஆயுதச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.