Vikram: டப்பிங் ஆர்டிஸ்ட்; பறவைகள்மீது பேரன்பு; விக்ரம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

விக்ரம்

இயற்பெயர் கென்னடி. அப்பா ஜான் விக்டர். அம்மா ராஜேஸ்வரி. ரசிகர்களுக்கு சீயான். நண்பர்களுக்கு கென்னி.

விக்ரம்

செம ஜாலி, கலகல பேர்வழி. ஆனால், படிப்பில் செம கெட்டி. ஏற்காடு கான்வென்டில் படிக்கும்போது பள்ளியில் ஃபர்ஸ்ட் க்ளாஸ், லயோலா காலேஜில் டிஸ்டிங்ஷன் என்று கெத்து காட்டியவர்.

விக்ரம்

மனைவி பெயர் ஷீலா, மகள் அக்‌ஷிதா, மகன் துருவ்.

பிஸி ஆவதற்கு முன், திரைத்துறையில் குறிப்பிடத்தகுந்த, டப்பிங் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் விக்ரம். `அமராவதி’ அஜித், `காதலன்’ பிரபுதேவா, `புதிய முகம்’ வினீத், `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ அப்பாஸ் என்று பலருக்கும் குரல் கொடுத்திருக்கிறார்

“மாஸ் ஹீரோக்களின் பாஸ் ஆகிறார், விக்ரம்!” – வருகிறான் ‘மாவீரன் கர்ணன்’

பறவைகள்மீது பெரும் பிரியம். ஆப்பிரிக்கன் கிரே, கோக்கடூ என்று பல வகைப் பறவைகள் வளர்க்கிறார். அவற்றுக்கு வித்தியாசமான பெயர்களிடுவது விக்ரம் ஸ்பெஷல். உதாரணத்துக்கு, ஒரு கிளியின் பெயர் ‘ரவுடி!’

விக்ரமின் ஆல் டைம் ஃபேவரிட் கேரக்டர் கமலின் சப்பாணி கதாபாத்திரம். அந்தக் கேரக்டருக்காகவே ‘16 வயதினிலே’ படத்தை நூற்றுக்கணக்கான முறை பார்த்தவர் விக்ரம்.

உடன் நடித்தவர்களிலேயே சிறந்த ஜோடி யார் என்று கேட்டால் யோசிக்காமல் ‘சாரா’ என்பார். தெய்வத்திருமகள் நிலா பாப்பா! “அது ஒரு மேஜிக்” என்பார்.

எம்.ஜி.ஆர் படங்களில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’, சிவாஜி படங்களில் ‘நவராத்திரி’. ரீமேக் செய்யப்பட்டால் விக்ரம் நடிக்க விரும்பும் படங்கள்.

“நமக்கு நாமே நல்லவனா இருக்குறதவிட, மத்தவங்களுக்கு நல்லவனா இருக்கணும்” – இதுதான் விக்ரமின் ரியல் லைஃப் பன்ச்.

பிறமொழி சேனல்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது முடிந்தவரை அந்தந்த மொழிகளிலேயே பேச முயற்சி செய்வார் விக்ரம். மொழி தெரிகிறதோ தெரியவில்லையோ, தயக்கமே இருந்ததில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.