நடிகர்களின் மறைவுக்கு பிறகு வெளியான அவர்கள் நடித்த படங்கள் தெரியுமா! | Photo Story

கொச்சின் ஹனீபா – மதராசபட்டினம் படத்தில் நம்பி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் ஹனீபா. அவரது மறைவிற்கு பிறகே அந்த படம் ரிலீஸ் ஆனது.

கல்பனா ரஞ்சனி – மலையாளம் தமிழ் மொழி படங்களில் நடித்தவர் மறைவுக்கு பிறகுதான் அவர் நடித்த தோழா படம் வெளியானது

ரகுவரன் – குணச்சித்திர நடிகரான ரகுவரன் மறைவுக்குப் பிறகு அவர் நடித்த யாரடி நீ மோகினி படம் வெளியானது.

அக்கினேனி நாகேஸ்வர ராவ் – நாகார்ஜுனாவின் தந்தையான நாகேஸ்வர ராவ் Manam படத்தின் தயாரிப்பின்போதே மறைந்தார். இந்த படம் பிறகு வெளியானது.

ஆர்த்தி அகர்வால் – தெலுங்கு சினிமா நடிகை ஆர்த்தி மறைவுக்கு பிறகு அவர் நடித்த Aame Evaru படம் வெளியானது.

கலாபவன் மணி – பிரபல நடிகரான கலாபவன் மறைந்த பிறகு அவரின் yathra chodikkathe என்கிற படம் ரிலீஸ் ஆனது.

புனித் ராஜ்குமார் – கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் மறைவுக்குப் பிறகு அவர் நடித்த ‘ஜேம்ஸ்’ என்கிற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ரிஷி கபூர் – ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் நடித்த படம் `Sharmaji Namkeen’ படப்பிடிப்பு நிறைவடைவதற்குள் அவர் மறைந்துவிட்டார். அதன் பிறகு மீதமிருந்த பகுதிகளை பரேஷ் ராவல் நடிக்க படம் முழுமையாக வெளியானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.