வட்டி விகிதம் அதிகரிப்பு.. இனி மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ அதிகரிக்குமே..!

பொது துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் கடனுக்கான வட்டி விகிதத்தினை 0.40% அதிகரித்து, 6.90.% ஆக அதிகரித்துள்ளது.

அதிகரிக்கப்பட்ட இந்த வட்டி விகிதமானது ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த நடவடிக்கையானது பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில் வந்துள்ளது.

8 மாதத்தில் 44.73 பில்லியன் டாலர் மாயம்.. ரிசர்வ் வங்கி அடுத்தது என்ன செய்யும்..?!

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

முன்னதாக ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை திடீரென 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில் அதிகரித்துள்ளது. இது கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க காரணமாக அமையலாம். எனினும் மறுபுறம் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.

RLLR விகிதம்

RLLR விகிதம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் லிங்க் செய்யப்பட்ட வட்டி (RLLR) விகிதமானது 6.50. சதவீதத்தில் இருந்து, 6.90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 1ல் இருந்து அமலுக்கு வரவுள்ளது. இது ஏற்கனவே கடன் வாங்கியோருக்கு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

 சேமிப்புகளுக்கு வட்டி அதிகரிப்பு
 

சேமிப்புகளுக்கு வட்டி அதிகரிப்பு

கடனுக்கான விகிதம் மட்டும், அல்ல, சேமிப்பு டெபாசிட்களுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்களுக்க்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது 5.10 – 5.15 சதவீதம் வரையில் அதிகரிக்கபபட்டுள்ளது.

வட்டி விகித நிலவரம்?

வட்டி விகித நிலவரம்?

7 நாள் – 14 நாட்கள் – 3.00%

15 – 29 நாட்கள் – 3%

30 – 45 நாட்கள் – 3%

91 – 179 நாட்கள் – 4%

180 – 270 நாட்கள் – 4.50%

271 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 4.50%

1 வருடத்திற்கு – 5.10%

1 – 2 வருடங்களுக்கு – 5.1%

இதே பிஎன்பி உத்தம் திட்டத்தில்

91 – 179 நாட்கள் – 4.05%

180 – 270 நாட்கள் – 4.55%

271 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 4.55%

1 வருடத்திற்கு – 5.15%

1 – 2 வருடங்களுக்கு – 5.15%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Punjab naional bank hikes lending rate by 40bps

Punjab naional bank hikes lending rate by 40bps/வட்டி விகிதம் அதிகரிப்பு.. இனி மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ அதிகரிக்குமே..!

Story first published: Sunday, May 8, 2022, 19:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.