மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டர் தனக்கு விதித்தத் தடையை நீக்க வேண்டும் என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனவே இப்போது டிரம்ப் ட்விட்டருக்கு திரும்புவது கடினமானது
ட்விட்டருக்கு திரும்ப விரும்பிய டொனால்ட் டிரம்ப்
ட்விட்டருக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த வழக்கை கலிபோர்னியாவில் உள்ள மாவட்ட நீதிபதி நிராகரித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதியை ட்விட்டர் தளத்தில் தடை செய்வது முற்றிலும் சட்டபூர்வமானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தற்போது டிவிட்டரை பயன்படுத்தக் கோரி, அதன் தடையை நீக்கக்கோரிய ட்ரம்பின் வழக்கை நிராகரித்த நீதிமன்றம், திருத்தப்பட்ட புகாரை தாக்கல் செய்ய மே 27 வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்த கால அவகாசம், டிரம்ப் மற்றும் அவருடன் சேர்த்து தடை விதிக்கப்பட்ட பயனர்களின் குழுவிற்கும் பொருந்தும்.
மேலும் படிக்க | டொனால்ட் டிரம்ப் Twitter கணக்கிற்கு நிரந்திர தடையா
டிரம்பிற்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது
டிரம்ப் மற்றும் தடைசெய்யப்பட்ட பயனர்களின் குழுவிற்கு மே 27 வரை அவகாசம் உள்ளது. அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு 8 ஜனவரி 2021 அன்று மைக்ரோ-பிளாக்கிங் தளமான டிவிட்டரால் தடைசெய்யப்பட்டது.
அதன் பிறகு டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு புளோரிடாவில் ட்விட்டருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார். 2021 இல் டிரம்ப் தொடுத்த வழக்கு, பின்னர் ட்விட்டரின் சொந்த மாநிலமான கலிபோர்னியாவுக்கு அனுப்பப்பட்டது.
டிவிட்டர் தன் மீது விதித்தத் தடையை நீக்கக்கோரிய டிரம்ப் அதேபோன்ற வழக்கை யூடியூப் மற்றும் மெட்டாவுக்கு எதிராகவும் (அப்போது பேஸ்புக்) தாக்கல் செய்தார்.
ட்விட்டர் மீது வழக்கு தொடர்ந்த டிரம்ப்
முதற்கட்ட விசாரணையின் போது டிரம்ப்புக்கு தோல்வியே கிடைத்தது. அதனால், ட்விட்டரில் தனது கணக்கை மீட்டெடுக்க முடியாமல் இருந்த டிரம்ப், அதன்பிறகு வழக்கை மீண்டும் திருத்தியிருந்தார். அந்த வழக்கும் இப்போது மீண்டும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இப்போது எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கவிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த டிரம்ப், எலோன் மஸ்க் தனது தடையை நீக்கினாலும் ட்விட்டருக்குத் திரும்புவதில் ஆர்வம் இல்லை என்று கூறியிருந்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு டிரம்ப் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வெறும் ரூ.821-க்கு அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் சேல் அதிரடி
முன்னதாக, சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்த நிலையில் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
அதையடுத்து 2021, ஜனவரி 6ம் தேதியன்று பிரநிதிநிதிகள் சபை கூடவிருந்த நிலையில், கேபிடல் ஹில் வளாகத்தில் கூடிய டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
கேபிடோல் ஹில் வன்முறை என்று அறியப்படும் அந்த வன்முறைகளுக்கு காரணமாக இருந்ததாக, டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
இதை அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக டிவிட்டர் நிறுவனமும் டொனால்ட் டிரம்பின் கணக்கை முடக்கியது. அதை எதிர்த்து டிரம்ப் சட்டப்போரட்டம் நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க | Xi Jinping ஒரு ‘கொலையாளி’ தான்; ஆனாலும் எனது நண்பர்: டொனால்ட் டிரம்ப்