ரஷ்யாவிடம் சரணடைவது என்பது இறப்புக்கு சமன்! உக்ரைன் தளபதிகளின் ஆவேசம்


ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்லை

எனவே அவர்களிடம் சரணடையப்போவதில்லை என்று மரியுபோலில் உள்ள இரும்பு ஆலையில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் படைத்தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

மரியுபோலில் உள்ள தளத்தில் உள்ள அசோவ் படைப்பிரிவின் தளபதி மற்றும் துணைத் தளபதி ஆகியோர் இன்று செய்தியாளர்களுடன் நடத்திய அரிய இணைய செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளனர்.

சரணடைவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, எதிரிக்கு இவ்வளவு பெரிய பரிசை தம்மால் வழங்க முடியாது,

பிடிபடுவது என்றால் இறந்துவிட்டதாக அர்த்தம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தாம் ஒரு ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போராடுவதாக தெரிவித்துள்ள உக்ரைன் படைத்தளபதிகள், உக்ரைனுக்கு பயங்கரவாதத்தை கொண்டு வரும் எதிரிக்கும எதிராகவும் அவர்களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராகவும் போராடுவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த இரும்பு ஆலையில் சுமார் ஆயிரம் உக்ரைன் படையினர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

மரியுபோல் ஆலையில் இருந்து பொதுமக்கள் அனைவரும்  வெளியேற்றப்பட்டமையை உறுதிப்படுத்தமுடியவில்லை.

உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்களா? என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை என்று ஆலைக்குள் சிக்குண்டிருக்கும் உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளனர்.

மரியுபோலில் உள்ள தளத்தில் உள்ள அசோவ் படைப்பிரிவின் தளபதி மற்றும் துணைத் தளபதி ஆகியோர் இன்று செய்தியாளர்களுடன் நடத்திய அரிய இணைய செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளனர்.

இன்றும் ரஷ்யப் படைகள் தொடர்ந்து இரும்பு ஆலையின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அவர்கள் ஆலையைத் தகர்க்க முயல்வதாகவும் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் படையதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்  

மரியுபோல் இரும்பு ஆலையில் தங்கியுள்ள உக்ரைன் படையினர் இணையம் மூலமான அரிய செய்தியாளர் சந்திப்பு

ரஷ்யாவின் முற்றுகைக்குள் இருக்கும் உக்ரைன் மரியுபோல் இரும்பு ஆலையில் தங்கியுள்ள உக்ரைன் படையினர் இன்று இணையம் மூலமான அரிய செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.

இதன்போது அவர்களின் மீட்புக்கான வேண்டுகோள் விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரும்பு ஆலையின் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் தங்குமிடங்களில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் வெளியேறியதை அடுத்து, அந்த தளத்தில் ரஷ்யா தனது தாக்குதல்களை முடுக்கிவிடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆலைக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான உக்ரைனிய படையினர் தங்கள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என்று ரஷ்யா நிபந்தனை விதித்துள்ளது.

எனினும் சரணடையப் போவதில்லை என்று ஆலைக்குள் உள்ள உக்ரைன் படையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இணையவழி செய்தியாளர் சந்திப்பில், அசோவ் படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் ரேடிஸ் ப்ரோகோபென்கோ மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் செய்தியாளர்களுடன் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.