Sai Pallavi: நேற்று அராத்து ஆனந்தி; இன்று மைத்ரேயி; எப்போதும் மலர்!|Photo Story

மலையாளத்தில் வெளியாகி தமிழில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிய படம் உண்டெங்கில் அது பிரேமம் தான். மலர் டீச்சருக்காகவே திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்கள் அதிகம்.

சாய் பல்லவி தான் மலர் டீச்சர். படத்திலும் தமிழ் பேசும் ஹீரோயின். ரசிகர்கள் அந்த கேரக்டரைக் கொண்டாடித் தீர்த்தனர். `மலரே நின்னை காணாதிருந்தால்’ பாடல், இப்போ வரைக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

கோயம்புத்தூருக்கு பல சிறப்புகள் இருக்கலாம். அதில் ஒன்று சாய் பல்லவி வளர்ந்த ஊர் என்கிற சிறப்பு. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தான் பல்லவி பிறந்தது. அப்பா செந்தாமரை கண்ணன். அம்மா, ராதா. தங்கை பூஜா.

ஜார்ஜியாவில் மருத்துவம் படித்த சாய் பல்லவி பிரேமம் படத்திற்கு முன்பே ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தில் ஒரு சீனில் தோன்ற மட்டுமே செய்வார். குழந்தை நட்சத்திரமாக மலையாளம் படம் ஒன்றில் வரவும் செய்திருக்கிறார்.

`உங்களில் யார் பிரபுதேவா’, தெலுங்கில் `Dhee Ultimate Dance Show’ ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் ஆரம்பத்தில் பங்கேற்று இருக்கிறார். மாரி 2, ஷியாம் சிங்கராய், லவ் ஸ்டோரி படங்களின் பாடல்களில் சாய் பல்லவியின் நடனம் வேற லெவல்.

தமிழில் அறிமுகமாகும் முன்பே இங்கே பெரிதும் அறியப்பட்டார். கரு படம் தான் தமிழில் இவருக்கு முதல் படம். தெலுங்கில் ‘பிடா’ நல்ல ஓப்பனிங்க்கைக் கொடுத்தது.

பெர்னெஸ் கிரீம் விளம்பரத்துக்கு நோ சொன்னவர். `இந்தியர்களின் நிறம் இது. வெளிநாட்டவர்களிடம் நீங்கள் ஏன் வெள்ளையாக இருக்கீர்கள் எனக் கேட்பதில்லை. அது அவர்கள் நிறம் இது நம் நிறம்’ எனப் பேசியவர்.

சமீபத்தில் வெளியான ஷியாம் சிங்க ராய் படத்தில் மைத்ரேயி என்கிற தேவதாசி கதாபாத்திரத்தில் சாய் பல்லவியின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

சாய் பல்லவி போல்ட் ஆன கேரக்டர். தவறு என்று தோன்றுவதை ஒருபோதும் சொல்வதற்கு அவர் தயங்கியதில்லை.

ராணா டகுபதி உடன் சாய் பல்லவி நடித்த Virata Parvam படம் ஜூலையில் வெளியாக இருக்கிறது.

பரிட்சயமான புன்னகை, சாந்தமான பார்வை, இளம்பிராய க்ரஷ்ஷை நினைவுபடுத்தும் முகம். நம்ம கதாநாயகி என கொண்டாட செய்பவர் சாய் பல்லவி. ஹாப்பி பர்த்டே, மலர் டீச்சர்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.