அடுத்தடுத்து வெளியேறும் உயர் அதிகாரிகள்.. ஆட்டம் காணும் ஓலா..!

இந்தியாவின் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் தீ பிடித்து எறிந்த சம்பவம் மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்தத் தீ விபத்துக்கு என்ன காரணம் என மத்திய அரசு இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மத்தியில் ஆய்வு செய்து வருகிறது.

இந்தத் தீ விபத்து மூலம் பிராண்டு வேல்யுவில் இருந்தும் வர்த்தகம் வரையில் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட ஓலா நிறுவனம் தற்போது நிர்வாகத்திலும் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

ரூபாய் மதிப்பு சரிவு.. என்.ஆர்.ஐ, ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

ஓலா ஸ்கூட்டர் தீ விபத்து

ஓலா ஸ்கூட்டர் தீ விபத்து

ஓலா ஸ்கூட்டர் தீ விபத்துக்குப் பின்பு ஓலா குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பாவிஷ் அகர்வால் தனது சிஇஓ பதவியை விடுத்து டெக் பிரிவில் முழு நேரம் பணியாற்ற முடிவு செய்தார். இதற்காகத் தனது தினசரி பணிகள் அனைத்தையும் ஓலா குழுமத்தின் CFO-வான அருண்-க்கு அளிக்கப்பட்டது.

பாவிஷ் அகர்வால்

பாவிஷ் அகர்வால்

ஆனால் பாவிஷ் அகர்வால் தனது பணிகளை டெக் துறையில் மேற்கொள்ளத் துவங்கிய பின்பு அடுத்தடுத்து உயர் அதிகாரிகள் வெளியேறி வருவது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதன் வாயிலாக ஓலா குழுமத்தின் நிர்வாகமே தற்போது ஆடிப்போய் உள்ளது.

தினேஷ் ராதாகிருஷ்ணன்
 

தினேஷ் ராதாகிருஷ்ணன்

ஓலா எலக்ட்ரிக் மற்றும் ஓலா கேப்ஸ் ஆகிய இரண்டிலும் முக்கியமான பொறியியல் செயல்பாடுகளைக் கையாண்ட தினேஷ் ராதாகிருஷ்ணன் ஓலா நிறுவனத்தை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

அருண் சிர்தேஷ்முக்

அருண் சிர்தேஷ்முக்

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி தினேஷ் ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் வெளியேறியுள்ளார். கடந்த வாரம் ஓலா கார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் சிர்தேஷ்முக் நிறுவனத்தை விட்டு வெளியேறியது முக்கியமானது.

தலைமை தொழில்நுட்ப அதிகாரி

தலைமை தொழில்நுட்ப அதிகாரி

தினேஷ் ராதாகிருஷ்ணன் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி என்ற முக்கியமான பதவியில் இருந்து வெளியேறியுள்ளார். அவரது விலகல் மூலம் ஓலா நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் மிகப்பெரிய பாதிப்பு உருவாகியுள்ளது.

உயர் அதிகாரிகள்

உயர் அதிகாரிகள்

குறிப்பாக ஓலா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான கால இடைவெளியில் வெளியேறுவது நிர்வாகத்தின் ஸ்திரமற்ற தன்மையைக் காட்டுகிறது.

ஓராண்டு மட்டுமே

ஓராண்டு மட்டுமே

தினேஷ் ராதாகிருஷ்ணன் ஓலாவில் ஓராண்டு மட்டுமே பணிபுரிந்து உள்ளார். லின்கிடுஇன் தளத்தின் தரவுகள் அடிப்படையில் ஓலாவில் அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி இந்த மாதத்துடன் முடிவடைந்தது.

உயர் பதவி

உயர் பதவி

தினேஷ் ராதாகிருஷ்ணன் ஓலா நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் தலைவராகச் சேர்ந்த ஒராண்டுக்குள்ளேயே பல முக்கியமான திட்டங்களில் பணியாற்றித் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ola chief technology officer Dinesh Radhakrishnan quits within 1 year; bhavish aggarwal in trouble

Ola chief technology officer Dinesh Radhakrishnan quits within 1 year; bhavish aggarwal in trouble அடுத்தடுத்து வெளியேறும் உயர் அதிகாரிகள்.. ஆட்டம் காணும் ஓலா..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.