Vivo Y15C: யாருக்கும் தெரியாது – மறைமுகமாக பட்ஜெட் போனை வெளியிட்ட விவோ!

விவோ
நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது பட்ஜெட் ரேஞ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வகையில் நிறுவனம் புதிய Vivo Y15c ஸ்மார்ட்போனை சைலண்டாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

பட்ஜெட் பயனர்களுக்கு அதிகளவிலான கலெக்‌ஷன்களை சந்தையில் தர நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நிறுவனம் விவோ Y15s ஸ்மார்ட்போனை நுகர்வோர் பயன்பாட்டுக்காகக் கொண்டுவந்தது.

தற்போது வெளியாகி இருக்கும் புதிய பட்ஜெட் விவோ போனில், மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட், இரட்டை பின்புற கேமரா, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 5,000mAh பேட்டரி போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன.

Satellite Internet: ஸ்பேஸ் எக்ஸ்-க்கு போட்டியாக களமிறங்கும் அமேசான் புராஜக்ட் குயிப்பர்!

விவோ ஒய்15சி அம்சங்கள் (Vivo Y15C Specifications)

புதிய விவோ போனில் 6.51″ இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஐபிஎஸ் பேனலாகும். இந்த ஸ்மார்ட்போனை, மீடியாடெக் ஹீலியோ பி35 புராசஸர் இயக்குகிறது. புதிய ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான FunTouch OS 12 இதில் நிறுவப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் கேமராவைப் பொருத்தவரை, பின்பக்கம் இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. பிளாஷ் லைட்டும் இதனுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 13MP மெகாபிக்சல் முதன்மை சென்சாராகவும், கூடுதலாக 2MP மெகாபிக்சல் சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது.

செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8MP மெகாபிக்சல் கேமரா டிஸ்ப்ளே வாட்டர் டிராப் நாட்சில் கொடுக்கப்பட்டுள்ளது. போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5.0, வைஃபை, 4ஜி போன்ற ஆதரவும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Flipkart Sale: வெறும் ரூ.224க்கு மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் ஸ்மார்ட்போன் – வாங்க இதுதான் சரியான நேரம்!

விவோ ஒய்15சி இதர அம்சங்கள் (Vivo Y15C Features)

அக்செலெரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், புராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ், கைரோஸ்கோப் சென்சார்களும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண மைக்ரோ USB வழங்கப்பட்டுள்ளது. டைப்-சி தலைமுறையை நிறுவனம் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 10W வாட்ஸ் சார்ஜர் ஸ்மார்ட்போனுடன் வருகிறது. மிஸ்டிக் ப்ளூ, வேவ் கிரீன் ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் ஸ்மார்ட்போன் சந்தைக்குக் கொண்டுவரப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி மற்றும் விலை விவரங்கள் குறித்து நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. எனினும் இந்த ஸ்மார்ட்போனின் 3ஜிபி, 32ஜிபி வேரியண்டின் விலை ரூ.8000க்கும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக செய்திகள்:
Google Search: கூகுளில் இவற்றை ஒருபோதும் தேடாதீர்கள்!Realme Pad Mini: ரியல்மி மினி டேப்லெட் விற்பனை – வங்கிகள் வழங்கும் அதிரடி சலுகைகள்!AC Jacket: சிவாஜி பட ரஜினி மாதிரி ஏசி ஜாக்கெட் வேண்டுமா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.