செம ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை முதல் நாளே சரிவு.. இனியும் சரியுமா?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. வாரத்தில் முதல் நாளே சரிவினைக் கண்டுள்ள நிலையில், குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க இது சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவினைக் கண்டுள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இதே ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிவினைக் கண்டுள்ளது.

அடுத்தடுத்து வெளியேறும் உயர் அதிகாரிகள்.. ஆட்டம் காணும் ஓலா..!

இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன?கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? அடுத்த முக்கிய லெவல்கள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

குறைந்த தங்கம் விலை

குறைந்த தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வாரம் தொடங்கி ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகின்றது. எனினும் இந்த சரிவானது இனியும் தொடருமா? அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டாலர் மதிப்பு & பத்திர சந்தை ஏற்றம்

டாலர் மதிப்பு & பத்திர சந்தை ஏற்றம்

அமெரிக்க டாலரின் மதிப்பானது சந்தையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்புக்கு பிறகு, அமெரிக்காவின் பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதுவும் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளது. ஆக இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வட்டி இன்னும் அதிகரிக்கலாம்
 

வட்டி இன்னும் அதிகரிக்கலாம்

அமெரிக்காவின் மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள தொடர்ந்து வட்டி விகிதத்தினை, வரவிருக்கும் கூட்டத்திலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

ரஷ்யா - உக்ரைன் பதற்றம்

ரஷ்யா – உக்ரைன் பதற்றம்

பல காரணிகள் தங்கத்திற்கு எதிராக இருந்தாலும், ரஷ்யா உக்ரைன் பதற்றத்தின் மத்தியில், நேட்டோ நாடுகள் ஆதரவளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் நேட்டோ நாடுகளுக்கு எதிராக ரஷ்யா திரும்பலாம் என்ற பதற்றம் நிலவி வருகின்றது. இது தங்கம் விலையினை பெரியளவிலான சரிவினைக் தடுத்துள்ளது. இதற்கிடையில் சப்போர்ட் விலையானது 50,800 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் 51,500 ரூபாயாகவும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

வேலை சந்தை

வேலை சந்தை

அமெரிக்காவின் வேலை சந்தையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், வேலை சந்தையானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரம் வலுவாக மீண்டு வருவதை சுட்டிக் காட்டினாலும், பணவீக்கம் என்பது மிகப்பெரிய அச்சமாக இருந்து வருகின்றது. இதனை ஊக்குவிக்கும் விதமாக அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்தான அழுத்தம் காணப்படுகின்றது.

டெக்னிக்கல் எப்படியுள்ளது?

டெக்னிக்கல் எப்படியுள்ளது?

டெனிக்கலாக தங்கம் விலையானது இண்டிராடே வணிகத்தில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் மீண்டும் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தை இந்திய சந்தை என இரண்டிலுமே தங்கம் விலையானது தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து குறைந்த பின்னர் வாங்கி வைக்கலாம்.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 11.02 டாலர்கள் குறைந்து, 1871.20 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றம் கண்டாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் குறைந்த பின்னர் வாங்கி வைக்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையை போலவே வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது.இது தற்போது அவுன்ஸூக்கு 1.05% குறைந்து, 22.208 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்க சரியான வாய்ப்பு என்றால், இன்னும் குறையும்போது வாங்கினால் லாபம் அதிகம் கிடைக்கலாம்.

எம்சிஎக்ஸ் தங்கம்

எம்சிஎக்ஸ் தங்கம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 88 ரூபாய் குறைந்து, 51,252 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் கேப் டவுன் ஆகி கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படலாம். நீண்டகால வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கி வைக்கலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளி

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 293 ரூபாய் குறைந்தே, 62,255 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கேப் அப் டவுன் ஆகீ கீழாகவே தொடங்கியுள்ளது.எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது தற்போது தடுமாறினாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 4873 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 38,984 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை குறைந்திருந்தாலும், சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது தற்போது கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 5330 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 42,640 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 53,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 10 பைசா குறைந்து, 66.70 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 667 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 66,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் தடுமாறினாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். சற்று பொறுத்திருந்து வாங்குபோது இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இது சீனாவின் கொரோனா தாக்கம், பணவீக்கம்,டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on May 9th, 2022: gold prices today fall on form strong bond yields, US dollar

gold price on May 9th, 2022: gold prices today fall on form strong bond yields, US dollar/ செம ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை முதல் நாளே சரிவு.. இனியும் சரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.