Motorola: ரோலபிள் ஸ்மார்ட்போன் – மோட்டோ நிறுவனம் மும்முரம்!

மோட்டோரோலா
தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ளது. அது விரைவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் Razr வரிசையில் அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால், தற்போதுள்ள ஹாட் டாபிக் இதுவல்ல. நிறுவனம் விரைவில் “சுருட்டக்கூடிய” (Rollable) போனை அறிமுகம் செய்கிறது.

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, முதற்கட்டப் தயாரிப்புப் பணிகளில் இருக்கும் ரோலபிள் ஸ்மார்ட்போனுக்கு “Felix” என்ற குறியீட்டுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், ஒப்போ, எல்ஜி போன்ற நிறுவனங்கள் வெளியிட்ட கான்சப்ட் ரோலபிள் ஸ்மார்ட்போனை விட தனித்துவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Snapchat வெளியிட்ட ட்ரோன் கேமரா – இனி வீடியோக்களின் தரம் வேற லெவலில் இருக்கும்!

மோட்டோ ரோலபிள் போன்

பிற கான்செப்ட் போன்களைப் போன்று மோட்டோரோலா ரோலபிள் போனை டேப்லெட் போல பயன்படுத்தும்படி வடிவமைக்கவில்லை. மோட்டோவின் போன், சாதாரண ஸ்மார்ட்போன் போன்ற அளவிலேயே இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு வருகிறது.

பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களை பெரிதாக தர வேண்டும் என்று கருதியிருக்கும் வேளையில், மோட்டோவின் எண்ணம் காம்பேக்ட் வடிவமைப்பிலேயே உள்ளது. பெரிய போன்களை தற்போது பயனர்கள் வெறுக்கத் தொடங்கி உள்ளனர் என்றே சொல்லலாம்.

பயனர்கள் திறன்வாய்ந்த சிறிய காம்பேக்ட் போன்களை விரும்பத் தொடங்கி உள்ளனர். எனவே, சந்தையின் போக்கை மோட்டோ நிறுவனம் சரியாகக் கையாண்டு வருவதாக, வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்த போன் வரவுக்காக டெக் சந்தை காத்திருக்கிறது.

எனினும், நிறுவனம் இந்த போன் தயாரிப்பு பணிகளில் முதற்கட்டத்தில் இருப்பதால், வெகு விரைவில் இந்த ஸ்மார்ட்போனை சந்தையில் எதிர்பார்க்க முடியாது. ஒரு வருடம் அல்லது அதற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து நிறுவனம் தகவல் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi: விற்பனைக்கு வந்த சியோமி 12 ப்ரோ; ஒன்பிளஸ் 10 ப்ரோ நிலை என்னவாகும்!

சாம்சங் ரோலபிள் போன்

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங் நிறுவனமும் புதிய ரோலபிள் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. நிறுவனம் தனது ரோலபிள் டிஸ்ப்ளேவுக்கு காப்புரிமை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், சாம்சங்கின் போன் டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் என்ற இருவகைகளில் பயன்படுத்தும்படி தயாரிக்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

நிறுவனம் இதற்காக Quantum Dot OLED பேனலை பயன்படுத்துவதாக பதிவுத் தளத்தில் தகவல் தெரிவித்துள்ளது. Apple நிறுவனமும் பல காப்புரிமைகளை இதற்காக வாங்கி வைத்துள்ளது. அந்தவகையில், ரோலபிள் ஸ்மார்ட்போன்களுக்கான காப்புரிமைகளைப் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில், ஆப்பிள் முன்னிலை வகிக்கிறது.

ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக வளர்ந்து வரும் வேளையில், போல்டபிள் போன்களைத் தொடர்ந்து ரோலபிள் போன்களும் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், ரோலபிள் ஸ்மார்ட்போன்கள் குறித்த உங்களின் பார்வையை, கீழே கருத்துகளாக பதிவிடுங்கள்.

மேலதிகள் செய்திகள்:

Google Search: கூகுளில் இவற்றை ஒருபோதும் தேடாதீர்கள்!மின்வெட்டை சமாளிக்க இன்வெர்ட்டர் வாங்க போறீங்களா? Realme Smart TV: ரியல்மி களமிறக்கிய மலிவான பெரிய திரைகள் கொண்ட ஸ்மார்ட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.