Curd is rich in Vitamin D and B5 Which Reduces Hair Problems, Curd is great For having healthy Hair- முடி உதிர்தல் சிலருக்கு பொதுவான நிகழ்வாக இருக்கலாம், ஆனால் பலருக்கு அது மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும். எழுந்ததும், தலையணையில் சில முடிகளை பார்ப்பது உங்களை தினமும் கவலையடையச் செய்வதாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்களை நாங்கள் தொகுத்துள்ளோம்.
உங்களுக்கு அழகான மற்றும் நீண்ட கூந்தலை வழங்கக்கூடிய சில பிரபலமான, பழமையான இந்திய முடி பராமரிப்பு குறிப்பு இங்கு உள்ளது. அவை அனைத்தும் சில சமையலறை பொருட்களை உள்ளடக்கியது.
அடர்த்தியான, நீண்ட கூந்தலுக்கு தயிர் எப்படி பயன்படுத்துவது?
செம்பருத்தி தூள், நெல்லிக்காய் தூள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு சேர்த்து ஒரு ஹேர் மாஸ்க்கை தயார் செய்து, ஒரு மென்மையான பேஸ்ட்டை உருவாக்கி, உங்கள் உச்சந்தலை முழுவதும் தடவவும்.
குறைந்தது 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு, பின்னர் ஷாம்பூவுடன் கழுவவும்.
செம்பருத்தி பொடியில் உள்ள அமினோ அமிலங்களின் அதிக உள்ளடக்கம், முடி வளர்ச்சியைத் தூண்டும் ஒரு சிறப்பு வகையான கெரட்டின் புரதத்தை உருவாக்குகிறது.
நெல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை உச்சந்தலையில் சுழற்சியை அதிகரிக்கின்றன மற்றும் முடி சேதத்தை குறைக்கின்றன.
தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன, இதில் நல்ல அளவு கால்சியம், பி-12 மற்றும் வைட்டமின் டி உள்ளது. அவை உச்சந்தலையில் நோய்த்தொற்றுகளை குறைத்து, முடியை கன்டீஷனிங் செய்கிறது.
நீளமான அடர்த்தியான கூந்தலுக்கு நீங்களே எளிதாக செய்யக்கூடிய இந்த குறிப்புகளை கண்டிப்பா டிரை பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“