ரஷ்யா மீது புதிய தடை விதித்த பிரிட்டன் அரசு.. கடுப்பான விளாடிமிர் புதின்..!

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யா மீது உலக நாடுகள் ஏற்கனவே பல தடைகளை விதித்த நிலையில் தற்போதும் மீண்டும் பிரிட்டன் விட்டுப்போன சில பொருட்கள் மற்றும் பிரிவுகளில் புதிதாகத் தடை விதித்துள்ளது.

ஏற்கனவே பிரிட்டன் பொருளாதாரம் விலைவாசி உயர்வின் கரணமாக அந்நாட்டின் பணவீக்கம் 10 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ளது. இந்த நிலையில் இப்புதிய தடை ரஷ்யா உடனான வர்த்தகம் மட்டும் அல்லாமல் பெலாரஸ் உடனான வர்த்தகத்தையும் பாதிக்க உள்ளது.

மின்சார தட்டுப்பாடு: இந்தியாவின் நிலைக்கு ரஷ்யா காரணமா..?

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யா மீதும், ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கும் பெலாரஸ் மீதும் பிரிட்டன் அரசு புதிய பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகளை அறிவித்துள்ளது.

2 பில்லியன் டாலர்

2 பில்லியன் டாலர்

இந்தத் தடையின் மூலம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை இரு நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எனப் பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம், பொருளாதாரம், நிதியியல் தடைகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை புதியதாக உள்ளது.

 விளாடிமிர் புடின்
 

விளாடிமிர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போர் மற்றும் நிதி நிலையைப் பலவீனப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய 1.7 பில்லியன் பவுண்ட் (2 பில்லியன் டாலர்) மதிப்பிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தடையை ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது புதிய தடைகளை இங்கிலாந்து இன்று அறிவிக்கிறது இன்று பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் பெலாரஸ்

ரஷ்யா மற்றும் பெலாரஸ்

இப்புதிய தடையில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் ஆகியவற்றின் மீதும் பிரிட்டன் நாட்டில் இருந்து இவ்விரு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கெமிக்கல், பிளாஸ்டிக், ரப்பர், மெஷின் ஆகியவற்றின் மீது தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த 4 பொருட்கள் பிரிட்டன் – ரஷ்யா ஏற்றுமதி வர்த்தகத்தில் சுமார் 10 சதவீதமாகும்.

பிளாட்டினம் மற்றும் பல்லேடியம்

பிளாட்டினம் மற்றும் பல்லேடியம்

உலகிலேயே பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக ரஷ்யா விளங்கும் நிலையில் இந்தத் தடை ரஷ்யாவை மட்டும் அல்லாமல் பிரிட்டனையும் பாதிக்கும். இதற்கு முக்கியக் காரணம் பிளாட்டினம் மூலம் ஆபரணமும், பல்லேடியம் பல முக்கியக் கருவிகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது தடையின் காரணமாக இது இவ்விரு உலோகத்திற்கு அதிகப்படியான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Britain Govt New sanctions against Russia and Belarus; 2 billion dollar trade Impact

Britain Govt New sanctions against Russia and Belarus; 2 billion dollar trade Impact ரஷ்யா மீது புதிய தடை விதித்த பிரிட்டன் அரசு.. கடுப்பான விளாடிமிர் புதின்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.