இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இந்த வாரத்தில் அமெரிக்காவில் டெஸ்லா தலைவர் எலோன் மஸ்கைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. .
மின்சாரக் கார் பேட்டரி தயாரிப்புக்கு முதன்மையான மூலப்பொருளான நிக்கல் உற்பத்தியில் உலக அளவில் இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது. நிக்கல் உற்பத்தி மையமான இந்தோனேசியாவின் சுலவாசி தீவுக்கு டெஸ்லா அதிகாரிகள் சென்றுள்ளனர்.