டாடா குழும பங்கினை வாங்க பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. என்ன காரணம்?

நடப்பு ஆண்டில் மல்டி பேக்கர் பங்குகள் பட்டியலில் டாடா பவர் பங்கும் ஒன்று. டாடா பவர் பங்கு விலை 110 ரூபாயில் இருந்து 230 ரூபாய் என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டில் இப்பங்கின் விலையானது 110 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும் இப்பங்கின் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 ஐபிஓ-க்கள்.. என்னென்ன நிறுவனங்கள்.. எப்போது?

அதெல்லாம் சரி ஏன் இந்த பங்கின் விலையானது அதிகரிக்கலாம். இதற்கான முக்கிய காரணம் என்ன? அதன் இலக்கு விலை என்ன? தரகு நிறுவனம் என்ன கூறுகின்றது. வாருங்கள் பார்க்கலாம்.

இலக்கு விலை

இலக்கு விலை

இது நீண்டகால நோக்கில் இலக்கு விலையாக 315 ரூபாயினையும் நிர்ணயம் செய்துள்ளது. டாடா பவர் பங்கு விலையானது இன்று ஒரு பங்குக்கு 230 ரூபாய் என்ற லெவலில் வர்த்தகமாகி வருகின்றது. இது நீண்டகால நோக்கில் 37 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாபம்

லாபம்

டாடா பவரின் காலாண்டு முடிவு பற்றி கூறிய ஷேர் கான், ஒருங்கிணைந்த நிகர லாபம் 31.41% அதிகரித்து, 632.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 481.21 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் 15.41% அதிகரித்து, 11,959.96 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 10,362.60 கோடி ரூபாயாக இருந்தது.

டிவிடெண்ட்
 

டிவிடெண்ட்

டாடா பவர் நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒரு பங்குக்கு 1.75 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இதே நிலக்கரி வணிகத்தில் PAT விகிதம், 36 சதவீதம் சரிவினைக் கண்டு, 397 கோடி ரூபாயினை சரிவினைக் கண்டுள்ளது. இது மார்ஜின் விகிதம் சரிவினைக் கண்டுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டது.

முந்த்ரா

முந்த்ரா

முந்த்ரா-வின் நிகர நஷ்டம் 484 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டில் 277 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது அதிகளவிலான எரிபொருள் விலை காரணமாக இந்தளவுக்கு இழப்பினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் ஓடிசாவில் உள்ள 4 டிஸ்காம்ஸ்-ம் லாபத்தில் உள்ளது. இதன் PAT விகிதம் 109 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டில் 42 கோடி ரூபாயாக இருந்தது.

 என்ன காரணம்?

என்ன காரணம்?

டாடா பவர் நிறுவனம் அதன் வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக, மறுசீரமைப்பு செய்து வருகிறது. இது நீண்டகால நோக்கில் பங்குக்கு சாதகமாக அமையலாம். இதன் அசெட் தரமும் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து நிறுவனம் புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு வருகின்றது. இதுவும் நீண்டகால வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம். இதற்கிடையில் தான் ஷேர்கான் நிறுவனம் இப்பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sharkhan broking firms expect strong upside in this multibagger Tata stock

Sharkhan broking firms expect strong upside in this multibagger Tata stock/டாடா குழும பங்கினை வாங்க பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. என்ன காரணம்?

Story first published: Monday, May 9, 2022, 22:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.