செஞ்சிலுவை தினம்| Dinamalar

புதுச்சேரி, : இந்திய செஞ்சிலுவை சங்கம் புதுச்சேரி கிளை சார்பில் உலக செஞ்சிலுவை தினம் சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனத்தில் கொண்டாடப் பட்டது. நிகழ்ச்சிக்கு இந்திய செஞ்சிலுவை சங்க புதுச்சேரி கிளை சேர்மன் டாக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் செஞ்சிலுவைச் சங்க நிறுவனர் ஹென்றி டோனட் பிறந்த தினம் உலக ரெட் கிராஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்று எடுத்துரைக்கப்பட்டது. செஞ்சிலுவை சங்கம் நாடு முழுவதும் மக்களுக்கு ஆற்றி வரும் சுகாதார பணிகள் குறித்து விளக்கப்பட்டது. புதுச்சேரி கிளை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு, குளியல் சோப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை அடங்கிய சுகாதார கிட் வழங்கப் பட்டது.சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவன தலைவர் ஷீத்தல் நாயக் நன்றி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.