கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை பிரதமர் ராஜபக்சேதான் காரணம் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராடி வந்த நிலையில், இன்று பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அதிபருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளர்களின் திறமையின்மை என்றும், ராஜபக்சே குடும்பத்தினர் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டும், பொதுமக்கள், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கோரி, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
https://patrikai.com/sri-lanka-president-gotabaya-rajapaksa-agrees-to-remove-brother-as-pm-amid-economic-crisis/
இதுதொடர்பாக எதிர்க்கட்சியினரும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தும் வலியுறுத்தினர். அப்போது, ராஜபக்சே ராஜினாமா செய்வார் என்று கோத்தபய கூறியிருந்தார்.
பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியதாகவும், ஆனால் அந்த செய்திகளை மறுத்த மகிந்த ராஜபக்ச, அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், தான் பதவி விலகப் போவதில்லை எனவும் முன்னதாக வெளியான செய்திகள் வெளியானது- தொடர்ந்து, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) மற்றும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன, ஆனால் பிரதமர் பதவி விலகப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.இதனால் மீண்டும் போராட்டம் சூடுபிடித்தது. இன்று காலை கொழும்புவில் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் 23- பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால், இலங்கையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இலங்கை முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக, பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார்.