ராஜினாமா செய்த ராஜபக்சே… கொழும்பில் வெடித்த கலவரம் – இலங்கை ரவுண்ட் அப்

1948-ம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றது இலங்கை. சுதந்திரத்துக்குப் பிறகு, தற்போதுதான் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது.

இலங்கை மக்கள்

ராஜபக்சே குடும்பத்தின் இலங்கை பொதுசன முன்னணிக் கட்சி, கடந்த 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிங்கள மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது.

ராஜபக்சே குடும்பம்

மகிந்த ராஜபக்சே 2004- 2005 காலகட்டத்திலும் இலங்கையின் பிரதமராக இருந்தவர். 2005 முதல் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு இலங்கையின் அதிபராகவும் செயல்பட்டவர். இவருடைய அரசு 2009-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றுகுவித்தது.

மகிந்த ராஜபக்சே

இலங்கை சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பியிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று தொற்று காரணமாக பிறக்கப்பிட்ட முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இலங்கை

இலங்கையில் பொருளாதார பிரச்னை காரணமாக மின் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, காஸ் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியானது.

இலங்கை

இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். ஆனால், பிரதமர் மகிந்த ராஜபக்சே தான் பதவி விலக போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இலங்கை போராட்டம்

இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதாரவாளர்கள் தலைநகர் கொழும்பில் கலவரத்தில் ஈடுபட்டனர். வன்முறை பெரிய அளவில் வெடித்ததால், அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை மக்கள் போராட்டம்

இதையொட்டி, போராட்டக்காரர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை: ராஜபக்சே சகோதரர்கள்

கொழும்பில் நடைபெற்ற வன்முறையின்போது இலங்கையில் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்ட இலங்கை ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி என்பவரை பொதுமக்கள் அடித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.