இத்தாலிய பிராண்டை கைப்பற்றினார் முகேஷ் ஆம்பானி.. ஆட்டம் ஆரம்பம்..!

இத்தாலிய பிராண்டை கைப்பற்றினார் முகேஷ் ஆம்பானி.. ஆட்டம் ஆரம்பம்..!

இந்தியாவில் இதுவரையில் பெரிய அளவில் யாரும் குறிவைக்காத ஒரு பிரிவை முகேஷ் அம்பானி முக்கிய இலக்காகக் கையில் எடுத்துள்ளார்.

குறைந்த வட்டி விகிதத்தில் ‘ஹோம் லோன்’ வழங்கும் 5 வங்கிகள்!

இந்தியாவில் ஆடம்பர சந்தைக்கான வர்த்தகம் அதிகளவில் இருந்தாலும், போதுமான பிராண்டுகள், வர்த்தகத் தொடர்புகள் இல்லாமல் இருக்கிறது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்த இடைவெளியைப் பயன்படுத்தி உலகின் முன்னணி பிராண்டுகளின் மொத்த இந்திய வர்த்தகத்தையும் அடுத்தடுத்து கைப்பற்றி வரும் முகேஷ் அம்பானி இந்திய ஆடம்பர சந்தை வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து அதில் ஆதிக்கம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தற்போது முகேஷ் அம்பானி இன்று இத்தாலி பிராண்டின் வர்த்தகத்தைக் கைப்பற்ற உள்ளார்.

 

ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்

ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்

ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் (RBL) திங்களன்று, இந்திய சந்தைக்கான இத்தாலிய ஆடம்பர லைப்ஸ்டைல் பிராண்டின் Tod’s SpA-வின் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனையாளராக நீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.

 Tod's பிராண்ட்
 

Tod’s பிராண்ட்

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய சந்தையில் காலணி, கைப்பைகள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்ய அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனையாளராக ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் இயங்கப்போகிறது.

2008 முதல்

2008 முதல்

இதுமட்டும் அல்லாமல் Tod’s SpA இந்தியாவில் 2008 முதல் இயங்கி வரும் நிலையில் பல முன்னணி மால் மற்றும் முக்கியமான இடத்தில் தனிப்பட்ட பிராண்ட் ஷோரூம் வைத்துள்ளது. இந்தக் கடைகள் அனைத்தையும் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் கைப்பற்ற உள்ளது மட்டும் அல்லாமல் Tod’s SpA-வின் பொருட்கள் அனைத்தையும் Ajio Luxe தளத்தில் விற்பனை செய்ய உள்ளது.

 ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

Tod’s பிராண்ட் சுமார் 318 நேரடி விற்பனை கடைகள், 88 பிரான்சைஸ் கடைகளை உலகம் முழுவதும் வைத்துள்ளது. ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் என்பது ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமாகும், இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இயங்கி வருகிறது.

ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல்

ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல்

ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிரிவில் இருக்கும் ஆடம்பரம் மற்றும் பிரீமியம் பிராண்டுகளை ஒருங்கிணைத்து இந்தியாவில் வர்த்தகத்தை உருவாக்கும் திட்டத்துடன் 2007 இல் உருவாக்கப்பட்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance Brands acquired Italian luxury shoe maker Tod’s Indian business

Reliance Brands acquired Italian luxury shoe maker Tod’s Indian business இத்தாலிய பிராண்டை கைப்பற்றினார் முகேஷ் ஆம்பானி.. ஆட்டம் ஆரம்பம்..!

Story first published: Monday, May 9, 2022, 23:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.