பொதுவாக நம்மில் சிலருக்கு இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைப் பெறுவர்.
முக சுருக்கம் வந்துவிட்டால் அவர்களுக்கு வயதாகி விட்டது என்பது மட்டுமே காரணம் கிடையாது. முதலில் முக சுருக்கம் நமது கண்களைச் சுற்றியே வரும்.
அதற்குப் பின் தான் முகத்தில் சுருக்கம் ஏற்படும். பாதிப்படைந்த சருமம் மற்றும் சூரியனின் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் கூட முக சுருக்கம் ஏற்படும்.
இதற்கு கண்ட கண்ட கிறீம்களை தான் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில எளிய வழிகள் மூலம் கூட சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- செம்பருத்தி இலைகளை காயவைத்து பொடி செய்து சலித்து பாட்டிலில் வைக்கவும். முகத்துக்கு எக்ஸ்ஃபோலியேட் செய்யும் போது இந்த பொடியுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து முகத்துக்கு ஸ்க்ரப் செய்யவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்து வரலாம். செம்பருத்தி பூக்களையும் காயவைத்து பொடியாக்கி பயன்படுத்தலாம்.
- கற்றாழை ஜெல் மாற்றாக கற்றாழை கூழ் அப்படியே பயன்படுத்தலாம். இவை இரண்டையும் கிண்ணத்தில் நன்றாக கலந்து முகத்தில் தடவி எடுக்கவும். இது சுமார் 15- 20 நிமிடங்கள் வரை விட்டு பிறகு முகத்தை சுத்தமாக கழுவி விடவும்.
சருமம் இயற்கையாகவே பொலிவாக இருக்க வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்யலாம்.
- தயிருடன் பொடியை நன்றாக கலக்கவும். க்ரீமி பதத்தில் வரும் வரை கலந்து எடுக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பிறகு முகத்தில் வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும். மாய்சுரைசர் பயன்படுத்தாமல் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க இவை உதவும்.
- செம்பருத்தி பொடி – 2 டீஸ்பூன்
பால் – 4 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்அனைத்து பொருள்களையும் நன்றாக கலந்து கொள்ளவும். இவை க்ரீம் பதத்தில் வரும் வரை கலந்து முகத்தில் தடவி விடவும். மேல் நோக்கி மென்மையாக மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் வரை விட்டு பிறகு முகத்தை சுத்தம் செய்யவும். இது முதுமையின் முன்கூட்டிய ஆரம்ப அறிகுறிகளை கட்டுப்படுத்தி இளமையான தோற்றத்தை அளிக்கும். வாரம் ஒரு முறை இதை செய்யலாம்.