முழு லாக்டவுனில் ஷாங்காய்.. ஜி ஜின்பிங்-ன் 3 புதிய டார்கெட்.. பணத்தை வாரியிறைக்க முடிவு..!

கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்தாலும் இன்னமும் முழுமையாகக் குறையாமல் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. ஆனாலும் பொருளாதாரம், வர்த்தகம், மக்கள், வருமானம் ஆகியவற்றை முதன்மையாகக் கருதி பெரும்பாலான நாடுகள் கட்டுப்பாடுகளைக் கிட்டதட்ட 95 சதவீதம் குறைத்து மக்கள் இயல்பு வாழ்க்கை முறைக்கு நகரத் துவங்கியுள்ளனர்.

ஆனால் உலகின் உற்பத்தி இன்ஜின் ஆக விளங்கும் சீனா கொரோனா தொற்று வேமாகப் பரவி வரும் நிலையில் இன்றும், கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட ஜீரோ கோவிட் பாலிசி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் ஜி ஜின்பிங் மிக முக்கியமான வளர்ச்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தடையா.. ஆதரவா.. எண்ணெய் விலை என்னவாகும்.. EU-ஐ உற்று நோக்கும் உலக நாடுகள்!

சீனா

சீனா

சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ஷாங்காய்-யில் கொரோனா தொற்றுக்காக ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதலான கட்டுப்பாடுகளை விதித்து மொத்த நகரத்தையும் முடக்கும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஷாங்காய்

ஷாங்காய்

ஷாங்காயில் மட்டும் அல்லாமல் சீனாவின் பல பகுதிகளில் இந்தக் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் பிரச்சனை இருக்கும் காரணத்தால் சீனாவின் உற்பத்தி குறைந்து, ஏற்றுமதி பாதித்து, 2022ஆம் ஆண்டின் வளர்ச்சி இலக்கை அடைய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இறக்குமதி பொருட்கள்
 

இறக்குமதி பொருட்கள்

இதனால் உலக நாடுகளில் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரித்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மே மாத முடிவிற்குள் சீனா இயல்பு நிலைக்குத் திரும்பும் எனச் சீன அரசு தனது கணிப்பை வெளியிட்டு உள்ளது. ஆனால் அதுவரையில் பல பிரச்சனைகளை உலக நாடுகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

 டெக், இன்பரா, வேலைவாய்ப்பு

டெக், இன்பரா, வேலைவாய்ப்பு

சீனாவில் தற்போது ஏற்பட்டு உள்ள பொருளாதார வளர்ச்சி தொய்வைச் சரி செய்யச் சீன அதிபர் ஜி ஜின்பிங் டெக், இன்பரா, வேலைவாய்ப்பு ஆகிய பிரிவில் அதிகளவிலான முதலீடு செய்து பொருளாதாரச் சரிவை மீட்டு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி தொய்வு

பொருளாதார வளர்ச்சி தொய்வு

ஆனால் பொருளாதார வல்லுனர்கள் சீனா கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தாத வரையில் சீனா பொருளாதாரத்தில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப முடியாது எனக் கூறுகின்றனர். தற்போது சீனாவில் 14க்கும் அதிகமான முக்கிய வர்த்தக நகரங்களில் கடுமையான லாக்டவுன் நடைமுறையில் உள்ளது.

வுஹான்

வுஹான்

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனா வுஹானில் தோன்றி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது, உலகின் பிற நாடுகளை ஒப்பிடும் போது குறைந்த இறப்பு எண்ணிக்கை இருந்தாலும், சீனா இன்னும் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Shanghai lockdown tightens; Xi Jinping 3 new targets to boost economy growth

Shanghai lockdown tightens; Xi Jinping 3 new targets to boost economy growth முழு லாக்டவுனில் ஷாங்காய்.. ஜி ஜின்பிங்-ன் 3 புதிய டார்கெட்.. பணத்தை வாரியிறைக்க முடிவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.