தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கி வரும் சீனா அதற்கு தேவையான பொருட்களை Tianzhou-4 சரக்கு ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பியது.
இந்த ஆண்டுக்குள் தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கி முடிக்க சீனா திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு விண்வெளி வீரர்களுக்கு தேவையான உயிர் காக்கும் கருவிகள், உணவுப் பொருட்கள், நிலைய கட்டுமான பணிக்கான உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு ஹைனான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டது.