இலங்கையில் ராஜபக்சே வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு – கலவரத்தில் ஆளும் கட்சி எம்.பி. படுகொலை?

பின்னர் கட்டிடத்தை சோதனை செய்து பார்த்த போது எம்.பியும் அவரது பாதுகாவலரும் இறந்து கிடந்தனர். கலவரத்தில் மொத்தம் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். 150க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இலங்கை எம்.பி. சனத் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜான்சன் ஆகியோரது வீடுகளும் தீவைக்கப்பட்டது. நாட்டில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று இலங்கை பார் கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அதிபர் கோதபய ராஜபக்சேயும் ராஜினாமா செய்யவேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து மக்களின் வாழ்க்கைத்தரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. எரிபொருள், மருந்து பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாமல் இருக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையை ஆண்ட மகிந்தா ராஜபக்சேயும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேயும்தான் காரணம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். இதையடுத்து இருவரும் பதவி விலகவேண்டும் என்று கோரி கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று மகிந்த ராஜபக்சே தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வந்தார். இதனால் கொழும்பில் அதிபர் அலுவலகத்திற்கு எதிரே அரசுக்கு எதிரானவர்களும், ஆதரவானவர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

பற்றி எரியும் தீ

இதில் 130-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். நிலைமை கைமீறி சென்றதால் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தவுடன் அவரின் ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதிபர் வீட்டிற்கு தீவைப்பு

இக்கலவரத்தால் போராட்டக்காரர்கள் முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடுகளை தாக்கியதோடு அவற்றுக்கு தீவைத்தனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் போலீஸாரின் வாகனங்களையும் தாக்கினர். போராட்டக்காரர்கள் பதவி விலகிய ராஜபக்சேயின் பூர்வீக இல்லத்திற்கு தீவைத்தனர். ஹெம்பதோடா என்ற இடத்தில் உள்ள மேதமுலாவில் இருக்கும் ராஜபக்சே மற்றும் அவரின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேயின் வீடுகளுக்கு தீவைத்தனர். இதில் வீடு தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. ராஜபக்சே கிராமத்தில் இருந்து பஸ்களில் நூற்றுக்கணக்கானோரை கிராமத்தில் கொண்டு வந்து தனது வீட்டிற்கு முன்பு நிறுத்தினார். அவர்கள் ராஜபக்சேயின் வீட்டிற்கு எதிரில் போராட்டக்காரர்கள் போட்டிருந்த தற்காலிக குடில்களை அப்புறப்படுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் ராஜபக்சே வீட்டிற்கு தீவைத்தனர்.

எம்.பி.படுகொலை

வட மேற்கு இலங்கையில் உள்ள நித்தம்புவா என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் ஆளும் கட்சி எம்.பி.யான அமரகீர்த்தியும் அவரின் பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், “அமரகீர்த்தியின் காரில் இருந்து போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்” என்று தெரிவித்தனர். இதனால் போராட்டக்காரர்கள் எம்.பி.யின் காரை கவிழ்த்தனர். காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய அமரகீர்த்தி அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் தஞ்சம் புகுந்தார். அக்கட்டிடத்தை பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் சுற்றி வளைத்தனர். இதனால் அமரகீர்த்தி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் கட்டிடத்தை சோதனை செய்து பார்த்த போது எம்.பியும் அவரது பாதுகாவலரும் இறந்து கிடந்தனர். கலவரத்தில் மொத்தம் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். 150க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இலங்கை எம்.பி. சனத் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜான்சன் ஆகியோரது வீடுகளும் தீவைக்கப்பட்டது. நாட்டில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று இலங்கை பார் கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அதிபர் கோதபய ராஜபக்சேயும் ராஜினாமா செய்யவேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.