பேஸ்புக்-ஐ வீழ்த்த முடியுமா..? டிவிட்டரை வைத்து மாஸ்டர் பிளான் போடும் எலான் மஸ்க்..!

எலான் மஸ்க்-ன் பேச்சு ஒரு நேரம் விளையாட்டுத்தனமாகவும், ஒரு நேரம் நம்ப முடியாததாகவும் இருக்கும். ஆனால் உண்மையில் ஆட்டோமொபைல் துறையில் டெஸ்லா-வும், விண்வெளி பயணத்தில் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் எலான் மஸ்க் செய்த சாதனைகளை பார்க்கும் போது வியப்பாகத் தான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் மீது குறிவைத்து மாபெரும் திட்டத்தையும், இலக்குகளையும் முதலீட்டாளர்கள் முன்னிலையில் சமர்ப்பித்து உள்ளார். இதில் பல அறிவிப்புகள் புரட்சிகரமானதாக இருக்கும் நிலையில் முதலீட்டாளர்களே வியந்து உள்ளனர்.

அப்படி எலான் மஸ்க் என்ன சொல்லியுள்ளார் தெரியுமா.. மணி.. மணி… மணி….

கூவிக் கூவி முதலீட்டை திரட்டும் எலான் மஸ்க்.. கடைசில இப்படி ஆகிடுச்சே..!

 பிட்ச் டெக்

பிட்ச் டெக்

டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற 46.5 பில்லியன் டாலர் தேவைப்படும் நிலையில் எலான் மஸ்க் பெரும் பகுதி பங்குகளை புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட முடிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு, தான் டிவிட்டரை கைப்பற்றிய பின்பு டிவிட்டர் எப்படி இருக்கும் எவ்வளவு வருவாயை ஈட்டும் என்பதற்கான பிட்ச் டெக் கொடுத்துள்ளார் எலான் மஸ்க்.

வருவாய் இலக்கு

வருவாய் இலக்கு

கடந்த வருடம் வெறும் 5 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய டிவிட்டர், 2028ஆம் ஆண்டுக்குள் வருடம் 26.4 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டும் அளவிற்கு வளர்ச்சி அடையும். இது கிட்டத்தட்ட 4 மடங்கு வளர்ச்சி

விளம்பர வருவாய்
 

விளம்பர வருவாய்

எலான் மஸ்க் நிர்வாகத்தில் டிவிட்டர் விளம்பர வருவாயை மட்டுமே நம்பியிருக்கும் நிலை மாறும். இதன் மூலம் 2020ல் 90 சதவீத வருவாய் விளம்பரத்தில் இருந்து மட்டுமே பெற்ற நிலையில் 2028ல் விளம்பரத்தின் வாயிலாக 12 பில்லியன் டாலரும், சப்ஸ்கிரிப்ஷன் மூலம் 10 பில்லயன் டாலர் வருவாயும் பெறும். இதன் மூலம் 2028ல் மொத்த வருவாயில் விளம்பர வருவாய் 45 சதவீதமாகக் குறையும்.

பேமெண்ட் வர்த்தகம்

பேமெண்ட் வர்த்தகம்

2023ஆம் ஆண்டுக்குள் பேமெண்ட் வர்த்தகம் மூலம் 15 மில்லியன் டாலர் வருவாயும், 2028க்குள் 1.3 பில்லியன் டாலர் வருவாயும் பெறும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர் வருமானத்தின் அளவு

வாடிக்கையாளர் வருமானத்தின் அளவு

2020ல் ஒரு வாடிக்கையாளருக்கு 24.83 டாலராக இருந்த சராசரி வருமானம் 2028ல் 30.22 டாலராக உயரும் என கணக்கிட்டு உள்ளார் எலான் மஸ்க்.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

ட்விட்டரின் மொத்த பயனர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இறுதியில் 217 மில்லியனாக இருந்தது. இது 2025 இல் கிட்டத்தட்ட 600 மில்லியனாகவும், இப்போதில் இருந்து ஆறு ஆண்டுகளில் அதாவது 2028ல் 931 மில்லியனாகவும் அதிகரிக்கும் என்று மஸ்க் கணக்கிட்டு உள்ளார்

X திட்டம்

X திட்டம்

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றினால் X என்ற புதிய ப்ராடெக்ட் அல்லது சேவையை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு 2028ஆம் ஆண்டுக்குள் 104 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.

ஊழியர்கள்

ஊழியர்கள்

டிவிட்டர் நிறுவனத்தில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள், இதில் எலான் மஸ்க் கைப்பற்றிய பின்பு சில ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.

ஆனால் 2025க்குள் புதிதாக 3600 ஊழியர்கள் சேர்க்கப்பட்டு மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 11,072 ஆக உயர உள்ளது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

 

எலான் மஸ்க்-ன் இலக்குகள் அனைத்துமே மிகவும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் இருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்ய முன்வருகின்றனர்.

ஆனால் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி இத்துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் பேஸ்புக்-ஐ எப்படி எலான் மஸ்க் வீழ்த்த போகிறார் என்பது தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk big plans for Twitter in Pitch deck; Can beat Facebook

Elon Musk big plans for Twitter in Pitch deck; Can beat Facebook பேஸ்புக்-ஐ வீழ்த்த முடியுமா..? டிவிட்டரை வைத்து மாஸ்டர் பிளான் போடும் எலான் மஸ்க்..!

Story first published: Monday, May 9, 2022, 16:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.