வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழருக்கு லொட்டரியில் கிடைத்த பரிசு! ஒரு வயது மகனால் கோடீஸ்வரர் ஆனார்


துபாயில் வசிக்கும் தமிழருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது அவரது வாழ்வையே மாற்றியுள்ளது.

தட்சிணாமூர்த்தி மீனாட்சி சுந்தரம் என்ற 29 வயது தமிழ் இளைஞருக்கு தான் அபுதாபி பிக் டிக்கெட் லொட்டரியில் Dh500,000 பரிசு விழுந்துள்ளது.
அவர் கூறுகையில், நான் கடந்த 9 ஆண்டுகளாக ஐக்கிய அமீரகத்தில் வசித்து வருகிறேன்.

ஐந்து ஆண்டுகளாக பிக் டிக்கெட் லொட்டரி விளையாடுகிறேன், எனக்கு பரிசு விழுந்ததாக தகவல் வந்த தருணத்தை மறக்கவே முடியாது, அதற்காக தான் ஆண்டுகணக்கில் காத்திருந்தேன்.

எனது வாழ்க்கையை மாற்றும் நம்பிக்கையுடன் நான் இந்த நாட்டிற்கு வந்தேன், இன்று அது உணரப்படுவதை நான் காண்கிறேன்.
நான் வழக்கமாக எனது நண்பர்கள் மற்றும் சகோதரரின் பங்களிப்புடன் ஒரு டிக்கெட்டை வாங்குவேன்.

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழருக்கு லொட்டரியில் கிடைத்த பரிசு! ஒரு வயது மகனால் கோடீஸ்வரர் ஆனார்

பல கோடிகள் பணம் இருந்தும் செலவழிக்காமல் கருமியாக வாழும் பெண்! அதுக்குன்னு இப்படியா? கணவர் சொன்ன தகவல்

இருப்பினும், நான் இந்த முறை தனியாக டிக்கெட் வாங்கினேன்,
என் மனைவி மற்றும் குழந்தையை சொந்த ஊரான மதுரைக்கு சென்று சமீபத்தில் தான் பார்த்து வந்தேன்.
என் மகனுக்கு வரும் 24ஆம் திகதி ஒரு வயது ஆகிறது.

அவன் பிறந்த திகதி 24/5/2021 ஆகும்.
அதனால் 24 மற்றும் 5 ஆகிய எண்களை லொட்டரி டிக்கெட்டின் கடைசி மூன்று எண்களாக தேர்வு செய்தேன்.
எனது மகனின் பிறந்தநாளுடன் பொருந்திய எண்கள் காரணமாக இந்த முறை எனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என நினைத்தேன். அது நடந்துவிட்டது என கூறியுள்ளார்.

கட்டுமான நிறுவனத்தில் சாதாரண சம்பளத்தில் பணிபுரியும் மீனாட்சி சுந்தரம் தனது மனைவி மற்றும் குழந்தையை துபாய்க்கு அழைத்து வர முடிவு செய்துள்ளார்.
என்ன தான் கோடீஸ்வரர் ஆகிவிட்டாலும் தொடர்ந்து தனது வேலையை செய்வேன் என அவர் கூறுகிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.