Tamil News Today Live: சென்னையில் வார்டுக்கு ஒன்று என 200 மருத்துவமனைகள் அமைக்கப்படும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Tamil Nadu News Updates: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 3,119 மையங்களில் 8.85 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 34வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ100.94-க்கும் விற்பனை

‘அசானி’ தீவிர புயல் 24 மணி நேரத்தில் வலுவிழக்கிறது

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகப்பேறு விடுப்பு – அரசு விளக்கம்

குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் அரசு ஊழியர்களுக்கு 365 நாள்கள் மகப்பேறு விடுமுறை உண்டு. சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்

மகிந்த ராஜபக்சவின் ராஜினாமா ஏற்பு

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக அதிபர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகல்

Live Updates
11:27 (IST) 10 May 2022
சென்னையில் 200 மருத்துவமனைகள் அமைக்கப்படும்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டத்தின்படி, சென்னையில் வார்டுக்கு ஒரு மருத்துவமனை என 200 மருத்துவமனைகள் அமைக்கப்படும்; இதன் மூலம் பெரிய மருத்துவமனைகளில் மக்கள் அதிகளவில் வருவதை தவிர்க்க முடியும் – சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

11:15 (IST) 10 May 2022
ம.பி. உள்ளாட்சி தேர்தல்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மத்தியப்பிரதேச மாநில உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கில், பொதுப்பிரிவினருக்கான வார்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்த எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

11:14 (IST) 10 May 2022
மின் தேவை எந்த பிரச்னையும் இன்றி கொடுக்கப்பட்டது!

ஏப்ரலில் 17 நாட்களும், மே 9 வரை உச்சபட்ச மின் தேவை 16,000 மெகா வாட் எந்த பிரச்னையும் இன்றி கொடுக்கப்பட்டது. மே 1-8 வரை 5,94,000 யூனிட் மின்சாரம், ரூ. 12 என்ற அளவில் எக்ஸ்சேஞ்ச் முறையில் கொள்முதல் செய்து மின் தேவை சரிசெய்யப்பட்டது என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!

10:51 (IST) 10 May 2022
அசானி புயல் – ஆந்திராவில் மழைக்கு வாய்ப்பு

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு . அசானி புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் விசாகப்பட்டின புயல் எச்சரிக்கை மையம் அறிவிப்பு

10:50 (IST) 10 May 2022
டேனிஷ்க்கு 2 ஆவது முறையாக புலிட்சர் விருது

மறைந்த புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் உள்பட 4 இந்தியர்களுக்கு புலிட்சர் விருது அறிவிப்பு. ரோஹிங்கியா அகதிகளின் நிலையை படம்பிடித்துக்காட்டியதற்காக டேனிஷ் சித்திக்கிற்கு ஏற்கனவே புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது

10:31 (IST) 10 May 2022
3 மணி நேரத்திற்கு மழை தொடரும்

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும். மேலும், கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!

10:30 (IST) 10 May 2022
இந்தியாவில் மேலும் 2,288 பேருக்கு கொரோனா

இந்தியாவில் மேலும் 2,288 பேருக்கு கொரோனா தொற்று.10 பேர் உயிரிழப்பு. கொரோனாவில் இருந்து மேலும் 3,044 பேர் குணமடைந்தனர். கொரோனாவுக்கு 19,637 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

10:18 (IST) 10 May 2022
இலங்கை காவல்துறை, ராணுவத்திற்கு சம்மன்

இலங்கையில் சட்டம், ஒழுங்கை பராமரிக்கத் தவறியது ஏன் என விளக்கம் கேட்டு காவல் துறைக்கும், ராணுவத்திற்கும் மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மே 12 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

10:06 (IST) 10 May 2022
தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ152 குறைந்து ரூ38,720க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ4,840க்கு விற்பனை

09:54 (IST) 10 May 2022
தென் கொரியா புதிய அதிபர் யூன் சுக்-யியோல்

தென் கொரியாவின் புதிய அதிபராக யூன் சுக்-யியோல் பதவியேற்பு. அணு ஆயுதங்களை முழுவதுமாக வடகொரியா கைவிட வேண்டும் என பேச்சு

09:32 (IST) 10 May 2022
அசானி புயல் – 10 விமானங்கள் ரத்து

சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூா் செல்லும் 10 விமானங்கள் ரத்து . அசானி புயல் எச்சரிக்கை காரணமாக விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

09:17 (IST) 10 May 2022
நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார் முதல்வர்

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு குறித்த சிறப்பு மலரையும் ஸ்டாலின் வெளியிட்டார்.

08:57 (IST) 10 May 2022
133 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

சேலத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 19 ஓட்டல்களில் இருந்து 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல். 8 கடைகளுக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு

08:42 (IST) 10 May 2022
மாளிகை வீட்டை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்ச

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையை விட்டு வெளியேறினார். வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை ராணுவம் அப்புறப்படுத்தியதை அடுத்த மகிந்த ராஜபக்ச வெளியேறினார்.

08:33 (IST) 10 May 2022
இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை நீட்டிப்பு. பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் நீட்டிப்பு

08:10 (IST) 10 May 2022
அடுத்த 3 மணி நேரத்துக்கு 33 மாவட்டங்களில் மழை!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, வேலூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.