பவர் கிரிட் கார்ப்பரேஷனின் CSR நிதி OBC மாணவர்களுக்கான உதவித்தொகைக்கும் பயன்படுத்தப்படும் : IIT-M புது விளக்கம்

பவர் கிரிட் கார்ப்பரேஷனின் CSR நிதி குறித்து தி.மு.க.வைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த நிதி OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கும் பயன்படுத்தப்படும் என்று சென்னை ஐ.ஐ.டி. புது விளக்கம் அளித்துள்ளது.

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் தனது 2021-22 நிதியாண்டின் சமூக பொறுப்பு நிதியில் (சி.எஸ்.ஆர். / Corporate Social Responsibility – CSR Fund) இருந்து ரூ. 10.5 கோடி சென்னை ஐ.ஐ.டி.க்கு வழங்கியுள்ளது.

இந்த நிதியை EWS எனும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குறிப்பிட்ட முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

அனைத்து பிரிவு மாணவர்களின் கல்வி உதவி தொகைக்காக செலவு செய்யாமல் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படும் என்ற சென்னை ஐ.ஐ.டி.யின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது.

சென்னை ஐ.ஐ.டி.க்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் எந்த அடிப்படையில் இந்த நிதியை வழங்கியது என்பது குறித்து மத்திய மின்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து ஐ.ஐ.டி. சென்னை புதிய அளித்திருக்கும் விளக்கத்தில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசே நேரடியாக கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கி வருகிறது.

 

பவர் கிரிட் கார்ப்பரேஷன் வழங்கிய இந்த நிதி பொது பிரிவினர் மற்றும் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஐ.ஐ.டி.யில் EWS மாணவர்களுக்கு மட்டும் ஸ்காலர்ஷிப் வழங்கிய பொதுத்துறை நிறுவனம் மீது விசாரணை வேண்டும் : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.