கட்டிட திட்ட வரைப்படம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்; சென்னை மாநகராட்சி உத்தரவு

Chennai Corporation advises building plans display at new construction entrance: சென்னையில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களின் திட்ட வரைப்படம் குறித்த தகவல்கள் கட்டிடத்தின் முகப்பு பகுதியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என சென்னை அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து புதிய கட்டுமானங்களின் நுழைவுத் தளத்தில் கட்டிடத்தின் திட்டம் குறித்த விளக்கப்படம் காட்டப்படுவதை உறுதி செய்யுமாறு சென்னை மாநகராட்சி தனது மண்டல பொறியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தலைமைப் பொறியாளர் (திட்டம்) பி துரைசாமியின் உள் சுற்றறிக்கையில், தற்போது அனைத்து புதிய கட்டுமானங்களிலும் கட்டிடத் திட்டங்கள் தளத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. எனவே, கட்டடங்களின் பெயர், சர்வே எண், முகவரி, கட்டிடக் கலைஞரின் பெயர், திட்ட அனுமதி, கட்டிட அனுமதி எண், தளங்களின் எண்ணிக்கை மற்றும் தளத் திட்டம் ஆகியவற்றைக் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்வு: தமிழக அரசு முக்கிய முடிவு

மேலும் கட்டுமான தளத்தில் விதிமீறல்கள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்யுமாறும் அதிகாரிகளை தலைமை பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.