இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஷன் மஹானாமா பொதுமக்கள் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரின் டுவிட்டர் பதிவில் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதை பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்க விரும்பவில்லை.
சக எதிர்ப்பாளர்களுடன் ஒற்றுமையாக நிற்கவும், ஊழல் மற்றும் அதிகார வெறி கொண்ட தலைவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு துணை நிற்கவும் எனது ஆதரவை தெரிவிக்க நேற்று மதியம் காலி முகத்திடலுக்கு வந்தேன்.
Staying at home while watching the country go into chaos was not an option. As soon as possible, I walked to Galle Face from home last afternoon to stand in solidarity with the fellow protestors and to show my support towards the fight against the corrupt, power hungry leaders pic.twitter.com/u1A9NwjFTJ
— Roshan Mahanama (@Rosh_Maha) May 10, 2022
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் போராட்டமானது அமைதியாக நடப்பதை மறந்துவிடாதீர்கள், நாட்டை குழப்பத்தில் ஆழ்த்த அரசு அனுமதித்த வன்முறை முயற்சிகள் இருந்தபோதிலும் அமைதியே தொடர வேண்டும்.
வன்முறையில் ஈடுபட வேண்டாம்.
தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம்.
பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதை நாம் தவிர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
and show our opposition to the government in a peaceful manner. Further, we must abstain from being violent against our fellow people as well as public and private property. I urge you all to keep the peaceful protests going to salvage our mother land from burning any further.
— Roshan Mahanama (@Rosh_Maha) May 10, 2022