தமிழ் சினிமாவில் என்ட்ரியாகும் தோனி… நயன்தாரா நாயகியா?

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, தமிழில் படங்களைத் தயாரிக்க உள்ளார். அவர் தயாரிக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற தகவல் இன்று பரவியிருக்கிறது. இது குறித்து விசாரித்தோம்.

சென்னை மீதும், தமிழ் சினிமா மீதும் பெரிய மரியாதை வைத்திருக்கிறார் தோனி. தோனியின் தயாரிப்பு நிறுவனத்தை ரஜினியின் முன்னாள் உதவியாளரான சஞ்சய், கவனிக்க உள்ளார் என்றும், முதல் தயாரிப்பாக நயன்தாரா நடிக்கும் படத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இது குறித்து நயன்தாராவிடம் பேசி வருகிறார்கள்.

நயன்தாரா

ரஜினியிடம் மூன்று உதவியாளர்கள் இருந்து வந்தனர். அவர்களில் சஞ்சய் மிக முக்கியமானவராக இருந்தார். ரஜினியைத் தொடர்புகொள்ள விரும்பும் பெரும் புள்ளிகள் பலரும் சஞ்சய்யைதான் தொடர்பு கொண்டு ரஜினியிடம் பேசிவந்தார்கள். ‘பேட்ட’, ‘தர்பார்’ படங்களில் ஒருசில சீன்களில் நடித்தும் இருந்தார் சஞ்சய். இந்நிலையில் சஞ்சய், இப்போது தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பேற்றிருக்கிறார்.

தோனி தயாரிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்குவார் என்றும், அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வருகின்றன. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.