இலங்கை மக்களுக்கான அர்ப்பணிப்பை இந்தியா மீண்டும் வலியுறுத்துகின்றது

இலங்கை நிலவரம் தொடர்பாக ஊடகங்களால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் 2022 மே 10 ஆம் திகதி புது டில்லியில் கீழ்வரும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

“இலங்கையின் மிகவும் நெருங்கிய நட்பு நாடென்ற ரீதியிலும் வரலாற்று ரீதியான உறவுகளின் அடிப்படையிலும் அதனுடைய (இலங்கையின்) ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு இந்தியா பூரணமான ஆதரவை வழங்குகின்றது.

அயலுறவுக்கு முதலிடம் என்ற எமது கொள்கைக்கு முக்கியத்துவமளித்து இலங்கையில் தற்போது காணப்படும் நெருக்கடிகளிலிருந்து அம்மக்கள் மீட்சிபெறுவதற்கு ஆதரவளிப்பதற்காக இந்த ஆண்டில் மாத்திரம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவி இந்தியாவால் வழங்கப்பட்டுள்ளது.  இதற்கு மேலதிகமாக உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக இந்திய மக்களும் உதவிகளை வழங்கியுள்ளனர்.

ஜனநாயக செயற்பாடுகள் ஊடாக வெளிப்படுத்தப்படும், இலங்கை மக்களின் சிறந்த நலன்களின் அடிப்படையில் இந்தியா எப்பொழுதும் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும்”.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

10 மே 2022  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.