நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால், ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற அரசுப் பள்ளி மாணவி, கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்த இனியாஸ்ரீ என்ற அந்த மாணவி திங்கட்கிழமை காலை பள்ளி செல்வதற்காக குமரவேல் பஸ் சர்வீஸ் என்ற தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.
பள்ளி நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என்று கூறிய நடத்துநர், அந்த இடம் வந்ததும் பேருந்து மெதுவாகச் செல்லும் என்றும் அப்போது இறங்கிக்கொள்ளுமாறும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பள்ளி நிறுத்தம் வந்தும் பேருந்தின் வேகம் குறையாத நிலையில், படியில் இருந்து இறங்கிய இனியாஸ்ரீ கீழே விழுந்து காயமடைந்தார்.