பொதுச் சொத்துக்களைக் கொள்ளையப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவரை கொள்ளுப்பிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் பேரே வாவி அருகிலுள்ள பாதையொன்றில் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது சிலர் அவரை வாகனத்தில் இருந்து இறக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ரத்கம பிரதேச சபை தலைவரின் வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்கம பொலிசார் தெரிவித்துள்ளனர். பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.