புதுடெல்லி,
நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான மூன்று கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 16ம் தேதி முதல் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு கோர்போவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 3 கோடி சிறுவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும், ஒரு கோடியே 20 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.