விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆறாம் வகுப்பு மாணவனை சாதி பெயரைச் சொல்லிய திட்டிய சக மாணவர்கள், அவனை எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தள்ளிவிட்ட கொடூர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுவிசிறி பகுதியைச் சேர்ந்த அந்த மாணவனை கடந்த ஒரு மாதத்திற்கு முன் பள்ளியில் வைத்து சாதி பெயரைச் சொல்லி சக மாணவர்கள் மூன்று பேர் திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவனின் பெற்றோர் புகாரளித்த நிலையில், சம்பந்தபட்ட மூன்று மாணவர்களை தலைமை ஆசிரியர் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனை வஞ்சம் வைத்திருந்த அந்த மாணவர்கள் சம்பவத்தன்று மாணவனை பிடித்து எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
குப்பைகளை எரிப்பதற்காக மூட்டப்பட்டிருந்த நெருப்பில் தள்ளிவிட்ட நிலையில், அலறிதுடித்த மாணவன் அருகிலிருந்த குடிநீர் தொட்டியில் விழுந்துள்ளான். தற்போது அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் மாணவன் சிகிச்சை பெற்று வருகிறான்.