இந்தியா உள்பட உலக நாடுகள் பல வாரத்தில் 4 நாள் தான் வேலை செய்யும் திட்டம் குறித்த எந்த முடிவும் எடுக்காமல் உள்ளன. ஆனால் சில நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இதனை ஏற்கனவே பரிசோதனை செய்து வெற்றியும் அடைந்துள்ளன.
கலிபோர்னியா மாகாணம் வாரத்தில் 4 நாள் தான் வேலை திட்டத்திற்கு விரைவில் சட்டம் ஏற்றவும் உள்ளது. சிஸ்கோ மற்றும் யுனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்கள் இதை பரிசோதித்து வருகின்றன. எனவே வாரத்தில் 4 நாள் தான் வேலை திட்டத்தைப் பரிசோதித்த நாடுகள் மற்றும் அதன் முடிவுகள் என்ன என்பது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
வாராக்கடன் அதிகரிப்பு.. 600 கிளைகளை மூடும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா!
சிஸ்கோ
சிஸ்கோ நிறுவனம் வாரத்தில் 4 நாள் தான் வேலை திட்டத்தைச் சென்ற ஆண்டு முதலே பரிசோதனை செய்து வருகிறது. 28 வாரங்கள் தொடர் பரிசோதனைக்குப் பிறகு இந்த புதிய வேலை திட்டத்துக்கு நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது. எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு ஊழியர்கள் நன்றாக வேலை செய்துள்ளார்கள். எனவே அனைத்து துறைகளிலும் இதை நடைமுறைப் படுத்துமாறு நிறுவனத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பெல்ஜியம், ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும், வாரத்தில் 4 நாள் தான் வேலைத் திட்டத்தைச் சோதிக்கும் விதமாக ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
பெல்ஜியம்
பெல்ஜியத்தில், வாரத்தில் நான்கு நாட்கள் அல்லது ஐந்து நாட்கள் வேலை செய்ய வேண்டுமா என்பதை ஊழியர்களே தேர்வு செய்யலாம். சில நாட்களுக்கு பிறகு தேவைப்பட்டால் வேலை நேரத்தை கூட குறைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வாரத்தில் 4 நாள் தான் வேலை என்ற திட்டத்தைப் பரிசோதித்தது. முதலில் 2,500 ஊழியர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியாக 4 நாட்கள் வேலை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. வாராந்திர வேலை நேரத்தையும் 45 மணிநேரத்திலிருந்து 35 மணிநேரமாக குறத்தது. இப்போது அங்கு 86 சதவீத ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்கின்றனர்.
ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்தில் செய்யப்பட்ட வாரத்தில் 4 நாள் தான் வேலைத் திட்ட பரிசோதனையில் சாதகமான முடிவு கிடைத்துள்ளது. விரைவில் அதை முழுமையாக அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
ஸ்வீடன்
2015-ம் ஆண்டு ஸ்வீடனில் செய்யப்பட்ட வாரத்தில் 4 நாள் தான் வேலை திட்ட பரிசோதனையில் கலவையான முடிவுதான் கிடைத்தது.
ஸ்பெயின்
ஸ்பெய்னில் கடந்த 3 ஆண்டுகளாக வாரத்திற்கு 4 நாட்கள், மொத்தம் 32 மணிநேரம் வேலை திட்டம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஜெர்மனி
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது ஜெர்மனியில் வாரத்திற்கு 34.2 மணி நேரம் வேலை செய்தால் போதும். இருந்தாலும் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்திற்கு அங்கு தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
ஜப்பான்
ஜப்பானில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களும் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்யலாமா என ஆலோசனை செய்து வருகிறார்கள்.
இந்தியா
இந்திய அரசு புதிதாகக் கொண்டு வர உள்ள 4 தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். அதாவது தினசரி 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
4-Day Workweek: Know Which Countries, Companies Are Testing This Idea; Know Results
4-Day Workweek: Know Which Countries, Companies Are Testing This Idea; Know Results | வாரத்தில் 4 நாள் வேலை திட்டத்தைப் பரிசோதித்த நாடுகள்.. முடிவுகள் என்ன தெரியுமா?