பெண்களை மையப்படுத்திய படங்களில் நடிக்க விரும்பும் அர்ஜுன் ராம்பால்
தாங்கள் ஹீரோவாக நடிக்கும் படங்களில் கதாநாயகிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருப்பதை பல ஹீரோக்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் பாலிவுட் நடிகரான அர்ஜூன் ராம்பால் இந்த விஷயத்தில் ரொம்பவே மாறுபட்ட சிந்தனை கொண்டவராக இருக்கிறார். இவர் பெண்களை மையப்படுத்தி, கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் படங்களில் நடிப்பதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார். இது ஆச்சரியமான விஷயம் தான் என்றாலும் இதற்கு பின்னணியில் நெகிழவைக்கும் ஒரு காரணமும் இருக்கிறது.
இதுபற்றி அர்ஜூன் ராம்பால் கூறும்போது, “இப்படி பெண்களை மையப்படுத்தி வெளியாகும் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தால் அதை உடனே ஏற்றுக் கொள்கிறேன். அதை என்னுடைய தாய்க்கு செலுத்தும் காணிக்கையாக தருகிறேன். தந்தை இல்லாத நிலையில் தனி ஒரு ஆளாக நின்று என்னை வளர்த்து ஆக்கியவர் என் தாய்” என்று கூறியுள்ளார். இவரது தாய் புற்றுநோய் காரணமாக கடந்த 2018 ல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.