இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இலங்கை தரப்புக்கும் இடையிலான தொழில்நுட்ப கலந்துரையாடல் நேற்று (9) ஆரம்பமானது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இணைய வழியூடாக இடம்பெறுகின்ற இந்த கலந்துரையாடலுக்கு நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி , நிதியமைச்சின் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்து கொள்கின்றது.
அவசர நிதியுதவிக்காக விடுத்த கோரிக்கை தொடர்பாக இங்கு அதிக கவனம் செலுத்த உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அலி சப்ரி தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, சர்வதேச நாணய நிதியத்திடம் அவசர நிதி உதவி கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.