வாரிசு கைகளுக்கு மாறிய டிவிஎஸ்.. வேணு சீனிவாசன் முடிவு..!

இந்தியாவில் அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்களின் நிர்வாகம் வாரிசு கைகளுக்கு மாறிவருவது மூலம் புதிய திட்டம், புதிய முதலீடு, அதிகப்படியான வளர்ச்சி என முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னணி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் ஜியோ நிறுவனத்தை ஆகாஷ் அம்பானியும், ரீடைல் நிறுவனத்தை ஈஷா அம்பானியும் நிர்வாகம் செய்யத் தனித் தலைமையகத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கேம்பஸ்-ல் அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வாரிசு கைகளுக்கு நிர்வாகத்தை அளித்துள்ளது.

வாராக்கடன் அதிகரிப்பு.. 600 கிளைகளை மூடும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா!

டிவிஎஸ் குழுமம்

டிவிஎஸ் குழுமம்

தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் குழுமத்தின் இரு முக்கிய நிறுவனத்தின் நிர்வாகம் வேணு சீனிவாசன் அவர்களின் மகன் மற்றும் மகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஹெச்சிஎல், ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனத்தைத் தொடர்ந்து டிவிஎஸ் நிர்வாகம் தற்போது வாரிசு கைகளுக்கு மாறியுள்ளது.

டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சேர்மனாக இருக்கும் வேணு சீனிவாசனின் மகன் சுதர்சன் வேணு மற்றும் மகள் லட்சுமி வேணு ஆகியோருக்கு டிவிஎஸ் மோட்டார், சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

சுதர்சன் வேணு, லட்சுமி வேணு
 

சுதர்சன் வேணு, லட்சுமி வேணு

இதில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தைச் சுதர்சன் வேணு, சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தை லட்சுமி வேணு ஆகியோர் இனி நிர்வாகம் செய்ய உள்ளனர். இவர்களது தலைமையில் இரு நிறுவனத்திலும் அடிப்படை மாறாமல் புதிய தொழில்நுட்பம், புதிய ஐடியாக்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட கால அனுபவம்

நீண்ட கால அனுபவம்

சுதர்சன் வேணு மற்றும் லட்சுமி வேணு ஆகிய இருவரும் நீண்ட காலம் நிறுவனத்தின் பல்வேறு பணியில் ஈடுபட்டுப் பல முக்கியத் திட்டங்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற பின்னரே தற்போது நிர்வாகப் பொறுப்பை டிவிஎஸ் மோட்டார் சேர்மன் வேணு சீனிவாசன் கொடுத்துள்ளார்.

ரூ.20000 கோடி வருவாய்

ரூ.20000 கோடி வருவாய்

சுதர்சன் வேணு மற்றும் லட்சுமி வேணு நிர்வாகத்தின் கீழ் டிவிஎஸ் குழுமத்தின் 2வது 10000 கோடி ரூபாய் விற்றுமுதல் குறுகிய காலகட்டத்தில் அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் வாகன பிரிவில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வரும் இதேவேளையில், BMW உடனான கூட்டணி மற்றும் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட Norton, சுவிஸ் ஈமொபிலிட்டி குரூப், EGO ஆகியவற்றின் மூலம் ஐரோப்பியச் சந்தையில் டிவிஎஸ் தனது வர்த்தகத்தைச் சுதர்சன் வேணு தலைமையில் வேகமாக விரிவாக்கம் செய்ய உள்ளது.

 சுந்தரம் கிளேட்டன்

சுந்தரம் கிளேட்டன்

லட்சுமி வேணு முடிவின் அடிப்படையில் தான் சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் அமெரிக்காவில் 2019ஆம் ஆண்டு டோர்செஸ்டர், தென் கரோலினா பகுதியில் புதிய பவுண்டரியை அமைத்து அமெரிக்க வர்த்தகத்தைக் கைப்பற்றத் துவங்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Venu Srinivasan passing baton to Sudarshan Venu, Lakshmi Venu; Took corner office in TVS, SCL

Venu Srinivasan passing baton to Sudarshan Venu, Lakshmi Venu; Took corner office in TVS, SCL வாரிசு கைகளுக்கு மாறிய டிவிஎஸ்.. வேணு சீனிவாசன் முடிவு..!

Story first published: Tuesday, May 10, 2022, 20:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.