பீஜிங், :நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு, சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீன அதிபர் ஷீ ஜிங்பிங்,68, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் செல்லவில்லை. இந்தாண்டு துவக்கத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரை, அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இதையடுத்து அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின.
இந்தாண்டு இறுதியில், மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் அவருடைய சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், சீன மருத்துவ முறைகளின்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பீஜிங், :நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு, சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சீன அதிபர் ஷீ
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.