கேன்ஸ் திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட இந்திய பிரபலங்களுக்கு கவுரவம்

கேன்ஸ் திரைப்பட விழா வரும் 17 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

பிரான்ஸில் வரும் 17 ஆம் தேதி 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள இந்திய நடிகர், நடிகைகளின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

image

அதன்படி இந்திய குழுவை, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழிநடத்திச் செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்ஷய் குமார், சேகர் கபூர் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதுதவிர தமிழ் நடிகைகள் நயன்தாரா, தமன்னா, பூஜா ஹெக்டே நடிகர்கள் நவாசுதீன் சித்திக்கி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 நடிகர் மாதவன் முதல் முதலாக இயக்கிய ராக்கெட்ரி: த நம்பி எஃப்கெட் திரைப்படம் வரும் 19 ஆம் தேதி ஒளிபரப்பப்படவுள்ளது. அப்போது, மாதவனுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.