உண்டியலில் சேமித்த பணத்தை இலங்கைக்கு நன்கொடையாக கொடுத்த தமிழக சிறுமி!


இலங்கைக்கு உதவுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது சேமிப்பு முழுவதையும் நன்கொடையாக அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த ₹ 4,400 இந்திய மதிப்பிலான பணத்தை, தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

சிறுமி தனது தாயுடன் சேர்ந்து தனது சேமிப்பை மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத்திடம் ஒப்படைத்தார்.

கண்டதும் சுட உத்தரவு: இலங்கை அரசு அதிரடி! 

உண்டியலில் சேமித்த பணத்தை இலங்கைக்கு நன்கொடையாக கொடுத்த தமிழக சிறுமி!

ட்விட்டர் பயனாளியான கவிந்தன், சிறுமி அளித்த நன்கொடை குறித்து ட்வீட் செய்துள்ளார்.

சிறுமியின் முயற்சியை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் பாராட்டி, ஒரு ட்வீட்டில், “இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான பிணைப்பின் வலிமையை இது காட்டுகிறது!!!” என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைக்கான மாநில நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) எம்பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். அரசின் கோரிக்கையை ஏற்று வெளிவிவகார அமைச்சுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், இலங்கையின் நிலைமை பரிதாபத்திற்குரியது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் உணவு மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் அவதியுறும் மக்களை ஆதரிப்பதற்காக அத்தியாவசியப் பொருட்களை வாங்க தமிழக மக்கள் அரசின் நிதிக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.