தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
San Antonio de los Cobres நகருக்கு வடமேற்கே 87 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தரைப்பகுதியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.