டாடா-வின் புதிய நெக்ஸான் மேக்ஸ்.. ஓரு சார்ஜில் 400 கிலோமீட்டர் மைலேஜ்.. விலை என்ன..?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபல எலக்ட்ரிக் வாகன மாடலான நெக்ஸான் ஈவியின் புதிய அப்டேட்டட் காரை மே 11-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய அப்கிரேடட் நெக்ஸான் ஈவி மெக்ஸில் அதிக பேட்டரி பேக்கேஜ், டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, கூடுதல் செயல்திறன் என பல்வேறு அம்சங்களுடன் வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜப்பான் அழிந்துவிடும்.. முன்கூட்டியே எச்சரிக்கும் எலான் மஸ்க்..!

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பலர் எலக்ட்ரிக் வாகனம் மீது தங்களது கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். அதை பயன்படுத்திக் குறைந்த விலையில் அதிக திறனுடைய எலக்ட்ரிக் கார் உற்பத்தியை டாடா மோட்டார்ஸ், மஹிந்தரா உள்ளிட்ட நிறுவனஙள் செய்து வருகின்றன.

விற்பனை

விற்பனை

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மார்ச் மாதம் எலக்ட்ரிக் கார் விற்பனை 377 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நெக்ஸான் ஈவி, டைகோர் ஈவி என மொத்தம் 3,357 எலக்ட்ரிக் கார்களை டாடா உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளது.

நெக்ஸான் ஈவி மெக்ஸ்
 

நெக்ஸான் ஈவி மெக்ஸ்

நெக்ஸான் ஈவி காரை முழு சார்ஜ் செய்யும் போது 312 கிலோ மீட்டர் வரை ஓட்டலாம். ஆனால் புதிய அப்டேட்டட் நெக்ஸான் ஈவி மெக்ஸ் கார் 400 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

விலை

விலை

நெக்ஸான் ஈவி 14.54 லட்சம் ரூபாய் முதல் 17.15 லட்சம் ரூபாயில் விற்பனையாகி வருகிறது. இதுவரையில் நெக்ஸான் ஈவி மெக்ஸ் என்ன விலைக்கு சந்தைக்கு வரும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் இப்போது உள்ள விலையை விட 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை விலை கூடுதலாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

ஃபாஸ்ட் சார்ஜிங்

ஃபாஸ்ட் சார்ஜிங்

மின்சார கார்கள் சார்ஜ் காலியாகிவிட்டால் அதை முழுமையாக சார்ஜ் செய்ய நீண்ட நேரம் எடுக்கும். அதை சமாளிக்கும் வகையில் ஃபாஸ்ட் சார்ஜிங் சேவையை டாடா நெக்ஸான் ஈவி மெக்ஸ் காரில் ஃபாஸ்ட் சார்ஜிங் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர்.

குறைவான பராமரிப்பு கட்டணம்

குறைவான பராமரிப்பு கட்டணம்

பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும் போது சர்வீஸ்க்கு செலவு செய்யும் கட்டணம் எலக்ட்ரிக் காரில் மிகவும் குறைவு. எனவே பராமரிப்பு கட்டணம் பெரும் அளவில் மிச்சமாகும்.

வரி விலக்கு

வரி விலக்கு

2020-2021 நிதியாண்டு முதல் கடனில் எலக்டிரிக் கார் வாங்கினால், வருமான வரி சட்டப் பிரிவு 80EEB கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும். பெட்ரோல் டீசல் கார்களுடன் ஒப்பிடும் போது எலக்ட்ரிக் கார் விலை அதிகம். அதுவே இதை வாங்க வாடிக்கையாளர்கள் தயங்குவதற்காக முதல் காரணமாகக் கூறுகின்றனர்.

பயண தூரம்

பயண தூரம்

இந்தியாவில் இப்போது தயாரித்து விற்கப்பட்டு வரும் எலக்ட்ரிக் கார்களில் ஒரு முறை சார்ஜ் செய்தால், அதிகபட்சம் 350 கிலோ மீட்டர் வரையில் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

ஊக்கத்தொகை

ஊக்கத்தொகை

எலக்ட்ரிக் கார்களை அதிகம் உற்பத்தி செய்ய ஒன்றிய அரசு ஊக்கத்தொகை வழங்கினாலும் அதை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இன்சூரன்ஸ் கட்டணம்

இன்சூரன்ஸ் கட்டணம்

எலக்ட்ரிக் கார்களின் மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் கட்டணத்தை ஐஆர்டிஏஐ 15 சதவீத தள்ளுபடி விலைக்கு வழங்குகிறது. ஆனால் விரிவான காப்பீடு கட்டணம் பெட்ரோல், டீசல் கார்களை விட அதிகமாக உள்ளது.

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தும் போது காற்று மாசு பூஜ்ஜியமாகக் குறையாது என்றாலும், பெட்ரோல், டீசல் கார்களை விட காற்று மாசு குறைவாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Nexon EV Max SUV Coming On May 11. Do You Know the price

Tata Nexon EV Max SUV Coming On May 11. Do You Know the price | மே 11-ம் தேதி விற்பனைக்கு வரும் டாடா நெக்ஸான் ஈவி மேக்ஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

Story first published: Tuesday, May 10, 2022, 16:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.