டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டிட் சுக்ராம் காலமானார். அவருக்கு வயது 94.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் சுக்ராம். அவருக்கு தற்போது 94 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தவர், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக உடல் மண்டிக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.