பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே… நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே – வைரமுத்து நெகிழ்ச்சி



சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக  மாறியுள்ளது.  

மக்கள் புரட்சியும்,  அரசியல் குழப்பமும் இலங்கை பற்றிய செய்தியை உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றிருக்கின்றது. 

அதேசமயம், கடந்த 2009ஆம் ஆண்டு இதே மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் கோரத்தினையும் உலகம் இன்று நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றது. 

அதை அறிந்த உலகத்தார் இலங்கை ஆட்சியாளர்களை வசை பாடாமல் தவிர்த்தால் தான் ஆச்சர்யம். 

இது இவ்வாறு இருக்க  இந்திய சினிமாவில்  மிகப்பெரிய கவிஞரான கவிப்பேரரசு வைரமுத்து  தற்போதைய இலங்கை பிரச்சினை தொடர்பில் அவரது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். 

அதில்,

நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
‘தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே…

ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே…


சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு  

என குறிப்பிடப்பட்டுள்ளது.  





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.