ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017-ம் ஆண்டு ஜூலை முதல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது.
ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது பல்வேறு மாநிலங்களின் வருவாய் சரியும். எனவே வருவாய் சரியும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்புத் தொகை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் அதிக லாபம் பார்த்த ரிலையன்ஸ்.. எப்படி தெரியுமா..?
ஏன் இழப்பீடு தேவையில்லை?
தற்போது ஜிஎஸ்டி மூலம் வரும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாயும் அதிகரித்துள்ளது. எனவே ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்குவதை நிறுத்துவதாக, அடுத்து நடைபெற உள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய அரசு சொல்ல வாய்ப்புகள் உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
சில மாநில அரசுகள் 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகளை முடிக்காமல் உள்ளன. அவை முடிந்த பிறகு மே மாத இறுதியில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி வருவாய் அதிகரிப்பு
அதில் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 14 சதவீத ஜிஎஸ்டி இழப்பீட்டை விட, ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூலில் கிடைத்த 20 சதவீத வளர்ச்சியே மாநில அரசுகளுக்கு போதுமானது என கூற உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.
வரி வருவாய் அதிகரிப்பு
அதில் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 14 சதவீத ஜிஎஸ்டி இழப்பீட்டை விட, ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூலில் கிடைத்த 20 சதவீத வளர்ச்சியே மாநில அரசுகளுக்கு போதுமானது என கூற உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.
பெரும் பொருளாதாரம் கொண்ட மாநிலங்கள்
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத் போன்ற பெரிய பொருளாதாரங்கள் கொண்ட மாநிலங்களின் வருவாயும் சில மாதங்களாக அதிகரித்துள்ளது. எனவே அடுத்து நடக்க உள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் இழப்பீடு வழங்குவது குறித்து விவாதம் பெரும் அளவில் இடம்பெறும்.
கடன்
இருந்தாலும் சில மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டைக் கேட்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்போது மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கடனை செலுத்த, ஜிஎஸ்டி செஸ் வசூலை பயன்படுத்த உள்ளதாக கூறும். எனவே ஜூன் மாதத்திற்குப் பிறகு மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டைப் பெறுவது கடினமே என கூறுகின்றார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நுகர்வு அதிகரிப்பு
கொரோனாவுக்கு முன் இருந்ததை விட தனிநபர் நுகர்வு 16 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே வரி வாவாயும் அதிகரித்துள்ளது என அரசு வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் கேம்
மேலும் ஆன்லைன் கேம், கேசினோ, ரேஸ் கோர்ஸ் பரிவர்த்தனைகள் மீது 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை 28 சதவீதமாக உயர்த்தவும் ஜிஎஸ்டி உறுப்பினர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தவல்கள் வெளியாகியுள்ளது.
கிரிப்டோகரன்ஸி
கிரிப்டோகரன்ஸி மீதான ஜிஎஸ்டி வரியும் உயரும் என கூறப்பட்டது. ஆனால், இப்போதைக்கு கிரிப்டோகரன்ஸி பரிவத்தனைகள் மீதான ஜிஎஸ்டி உயர்வு இருக்காது. அது குறித்து இன்னும் எந்த பரிந்துரைகளும் வழங்கப்படவில்லை. ஆனால் ஆன்லைன் கேம்களுக்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக கிரிப்டோகரன்ஸி மீதான வரி உயர்வு இருக்கும் என சொல்லப்படுகிறது. அதுகுறித்து நிதி அமைச்சகம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Centre May Say No More GST Compensation To States
Centre May Say No More GST Compensation To States | மாநிலங்களுக்கு இனி ஜிஎஸ்டி இழப்பீடு தேவையில்லை.. மத்திய அரசு முடிவு?