உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மே 4ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, நன்னடத்தையுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்புடைய செய்தி: `வாதிட எதுவுமில்லையெனில் நாங்களே பேரறிவாளனை விடுவிக்கிறோம்’- உச்சநீதிமன்றம் அதிரடி
இதையும் படிங்க… வருண்குமார் ஐபிஎஸ்க்கு எதிரான வரதட்சணை புகார் வழக்கு – உச்சநீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றமே முடிவெடுக்கும் என தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நட்ராஜ், விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பது தொடர்பாக குடியரசுத்தலைவர் முடிவெடுக்கவுள்ளார் என்றார். இது அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்ததால், இன்றைய விசாரணையில் நீதிமன்றம் முக்கிய முடிவு எடுக்கலாம் என தெரிகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM